Last Updated : 08 Jun, 2017 10:08 AM

 

Published : 08 Jun 2017 10:08 AM
Last Updated : 08 Jun 2017 10:08 AM

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம்: கேப்டன் மோர்கன் பெருமிதம்

நியூஸிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற சிறப்பான பந்துவீச்சே காரணம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து இங்கிலாந்து ஆடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 49.3 ஓவர்களில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹேல்ஸ் 56, ஜோ ரூட் 64, ஜாஸ் பட்லர் 61 ரன்களைக் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் மிலின், ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், டிம் சவுத்தி 2 விக்கெட்களையும், போல்ட், சாண்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரோஞ்சியின் விக்கெட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து கப்திலுடன் இணைந்த நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், அணியை மீட்கப் போராடினார்.

ஆனால் நியூஸிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. கப்தில் 27, டெய்லர் 39, புரூம் 11, நீஷம் 18 ரன்களில் அவுட் ஆக, சரியான துணை இல்லாமல் வில்லியம்சன் தவித்தார். தனியாக போராடிய அவர், 98 பந்துகளில் 87 ரன்களைச் சேர்த்து அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து நியூஸிலாந்து அணி, 44.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 87 ரன்கள் வித்தியாசத்தில் இங்கி லாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் பிளங்கட் 4 விக்கெட் களையும், பால், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களை யும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் பால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி பெற்றுள்ள புள்ளிகளின் எண் ணிக்கை 4-ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து அந்த அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், நிருபர்களிடம் கூறியதாவது:

நியூஸிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 310 ரன்களைக் குவித்தாலும், அது வெற்றிக்கு தேவையானதாக இருக்கும் என்று நான் கருதவில்லை. எதிர்பார்த் ததை விட 30 ரன்கள் குறைவாகப் பெற்றதாகவே நினைத்தேன். ஆனால் எங்கள் பந்து வீச்சாளர் களின் துல்லியமான பந்துவீச்சு இந்த குறையைப் போக்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு சிறப்பான பந்துவீச்சே காரணமாக இருந்தது. அதே நேரத்தில் எங்கள் பேட்டிங் சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மெத்தனமாக ஆடமாட்டோம். அப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு மோர்கன் கூறினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோற்றது குறித்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:

இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் எங்களைவிட சிறப்பாக செயல் பட்டனர். வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்த இங்கிலாந்தை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் நாங்கள் வெற்றி இலக்கை தொட்டு விடாதபடி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x