Last Updated : 20 Jun, 2016 09:30 AM

 

Published : 20 Jun 2016 09:30 AM
Last Updated : 20 Jun 2016 09:30 AM

2-வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்

இந்தியா - ஜிம்பாப்வே அணிக ளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

தோனி தலைமையிலான இந் திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த இரு அணிகளிடையேயான ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணி களிடையேயான முதல் டி20 கிரிக் கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளிடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே வில் இன்று நடக்கிறது.

முதல் டி20 போட்டியில் ஜிம் பாப்வேயிடம் தோல்வியடைந்த இந்திய அணி இன்றைய போட்டி யில் வெற்றிபெற்று தொடரை சமன்படுத்த வேண்டிய கட்டாயத் தில் உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் டி20 போட்டியில் மணிஷ் பாண்டே மட்டுமே ஓரளவு சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தார். இன்றைய போட்டியிலும் அவரது பேட்டிங் கையே இந்திய அணி நம்பியுள்ளது.

மேலும் ஒருநாள் போட்டித் தொடரில் அதிக ரன்களைக் குவித்த கே.எல்.ராகுல், டி20 போட்டியிலும் பார்முக்கு வந்து இந்திய அணிக்கு உதவுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல் டி20யில் இந்தியா தோற்பதற்கு பந்துவீச்சில் உள்ள பலவீனமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இப்போட்டியில் ரிஷி தவண் 42 ரன்களையும், ஜெய்தேவ் உனன்கட் 43 ரன் களையும் வாரி வழங்கினர். இதனால் இன்றைய போட்டியில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது சந்தேகம் என்று கருதப்படுகிறது. அவர்களுக்கு பதில் தவல் குல்கர்னி, பரிந்தர் ஷரண் ஆகி யோருக்கு வாய்ப்பு வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படும் தோனி, இந்த தொடரை எப்படியும் வெல்லவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அதே நேரத்தில் இந்தத் தொடரில் முதல் முறையாக வெற்றியை ருசித்துள்ள ஜிம்பாப்வே அணியும், தொடரை வெல்வதில் தீவிரமாக உள்ளது. அதனால் இன்றைய போட்டி கடுமையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x