Hockey WC: ஹர்மன்பிரீத் தலைமையில் 20 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்

Updated on
1 min read

புதுடெல்லி: எஃப்ஐஎச் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை ஹர்மன்பிரீத் சிங் வழிநடத்துகிறார்.

அடுத்த மாதம் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் - 2026 பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 14 முதல் 30-ம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இரண்டு நகரத்தில் அமைந்துள்ள மைதானங்களில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

குரூப் சுற்றான முதல் சுற்று ஆட்டத்தில் நான்கு பிரிவுகளாக 16 அணிகளும், பிரிவுக்கு நான்கு அணிகள் வீதம் விளையாடுகின்றன. குரூப் சுற்றில் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றில் விளையாடும். அதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தொடர்ந்து கிளாசிபிகேஷன் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். ஆகஸ்ட் 30-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணி விவரம்

>> கோல்கீப்பர்கள்: மோஹித், சுராஜ்

>> தடுப்பாட்ட வீரர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யஷ்தீப்.

>> மிட்ஃபீல்டர்கள்: ரஜிந்தர் சிங், ஆதித்ய அர்ஜுன், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்.

>> முன்கள வீரர்கள்: தில்பிரீத் சிங், ஷிலானந்த், ஷுக்ஜீத் சிங், மந்தீப் சிங், அபிஷேக்.

“இந்திய அணி அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட கலவையாக உள்ளது. அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது செயல்திறன் மூலம் தங்களுக்கான இடத்தை பிடித்துள்ளனர். இந்த தொடரை ஒவ்வொரு ஆட்டமாக அணுக விரும்புகிறோம்.

கடைசியாக கடந்த 1975-ல் இந்திய அணி உலகக் கோப்பை வென்றது. இந்தக் குழு வரலாறு படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த தொடரை மிகுந்த ஆர்வத்துடன் நாங்கள் எதிர்பார்த்து உள்ளோம்” என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் </p></div>
Kimi K3 சாட்பாட்டின் கட்டண சந்தாவை நிறுத்திய Moonshot AI: பின்னணி என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in