Last Updated : 14 Sep, 2016 03:39 PM

 

Published : 14 Sep 2016 03:39 PM
Last Updated : 14 Sep 2016 03:39 PM

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்; 7-0 கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கெல்டிக் அணியை 7-0 என்று பார்சிலோனா வீழ்த்துவதற்கு மெஸ்ஸியின் அபாரமான ஹாட்ரிக் உதவி புரிந்தது.

அலவேஸ் அணிக்கு எதிராக பார்சிலோனா கடந்த சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, இதனையடுத்து பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் ஹென்றிக் எந்த வித சோதனைகளையும் செய்ய விரும்பாமல் வலுவான அணியைக் களமிறக்கினார்.

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே நெய்மரிடம் இருந்து பாஸைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி நெருக்கடியான ஒரு கோணத்திலிருந்து முதல் கோலை அடித்து முன்னிலை வழங்கினார். 24-வது நிமிடத்தில் கெல்டிக் அணிக்கு கிடைத்த ஸ்பாட் கிக் வாய்ப்பை பார்சிலோனாவின் ஜெர்மனி கோல் கீப்பர் ஆந்த்ரே டெர் ஸ்டீஜன், மவுசா டெம்பிலி அடித்த ஷாட்டை தடுத்ததன் மூலம் முறியடித்தார்.

இதற்கு 2 நிமிடங்கள் கழித்து மீண்டும் நெய்மர் அளித்த பாஸை பெற்ற மெஸ்ஸி அருகிலிருந்து கோலாக மாற்றி 2-0 முன்னிலை அளித்தார்.

50வது நிமிடத்தில் நெய்மர் ஃப்ரீ கிக்கை அருமையாக கோலாக மாற்ற மற்றொரு ஸ்பானிய நட்சத்திரம் இனியெஸ்டா 59-வது நிமிடத்தில் 4-வது கோலை அடித்தார். இதற்கு ஒருநிமிடத்திற்குப் பிறகு மெஸ்ஸி 3-வது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார், பார்சிலோனா 5-0 என்று முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருக்கும் போது நெய்மர் மீண்டும் ஒரு அருமையான பாஸை அடிக்க சுவாரேஸ் அதனை நெஞ்சில் வாங்கிக் கட்டுப்படுத்தி பிறகு கோலாக மாற்றினார். மீண்டும் சுவாரேஸ், மெஸ்சியின் பாஸை வாங்கி கோலாக மாற்ற 7-0 என்று பார்சிலோனா வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x