Last Updated : 06 Apr, 2017 04:16 PM

 

Published : 06 Apr 2017 04:16 PM
Last Updated : 06 Apr 2017 04:16 PM

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகே மிகவும் சுதந்திரமாக ஆடுவதாக அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு யுவராஜ் சிங் திரும்பினார். கட்டாக்கில் அதிரடி சதம் கண்டார், பிறகு ஒரு அருமையான 45 ரன்களை அடுத்த போட்டியில் எடுத்து மீள்வரவில் நிரூபித்தார்.

நேற்று ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி அரைசதம் கண்டார், அதாவது டி20 அரைசதத்திற்கான சர்வதேச சாதனையை வைத்துள்ள யுவராஜ் நேற்று 23 பந்துகளில் அரைசதம் எடுத்தது இவரது குறைந்த பந்து டி20 அரைசதமாகும்.

“என்னுடைய பேட்டிங் கடந்த 2 ஆண்டுகள் ஏற்ற இறக்கமாக இருந்தது, ஆனால் நான் இந்தப் போட்டியில் சுதந்திரமாக ஆடினேன். இப்போது நான் சிறப்பாக ஆடுவதாகவே கருதுகிறேன். இதே ஃபார்மைத் தொடர வேண்டும்.

இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியது எனக்கு இந்த விஷயத்தில் உதவியது. நான் மனத்தளவில் சுதந்திரமாக ஆடுகிறேன், இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கவலையில்லாமல் ஆடினேன். சூழ்நிலைக்குத் தக்கவாறு நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ளப் போகிறேன்.

நான் நிறைய பந்துகளை பயிற்சியில் ஆடிவருகிறேன். வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிடுகிறேன். ஹைதராபாத் எனக்கு எப்போதுமே அதிர்ஷ்டமான இடம். ஹைதராபாத்தில் நிறைய ரன்கள் அடித்த பிறகு நான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளேன்.

கடந்த ஆண்டு சன் ரைசர்ஸ் எங்கு முடித்ததோ அங்கிருந்து தொடங்கியுள்ளோம். அனைத்து பேட்ஸ்மென்களும் இன்னிங்ஸ் முழுதும் சிறப்பாக ஆடினர். பிறகு பவுலர்கள் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். எங்கள் மைதானத்தில் நாங்கள் 7-ல் 5-ஐ வென்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற உதவிகரமாக இருக்கும்” என்றார் யுவராஜ் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x