Published : 27 May 2017 12:49 PM
Last Updated : 27 May 2017 12:49 PM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இங்கிலாந்து வெல்ல வாய்ப்பு: பிரையன் லாரா

ஐசிசி சாம்பியயன்ஸ் டிராபியை இங்கிலாந்து வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறும்போது, "என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தன. குறிப்பாக 2004-ம் ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் விளையாடிய இறுதி போட்டியை கூறலாம்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக இருக்க போகின்றன. இங்கிலாந்து அணி இந்தமுறை கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன். 20-20 உலகப் கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு, இங்கிலாந்து அணி சிறந்த வீரர்களை கொண்ட அணியாக உருவாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில்கூட இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனவே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற இங்கிலாந்துக்கு இம்முறை சாதகமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x