Last Updated : 14 Sep, 2016 02:30 PM

 

Published : 14 Sep 2016 02:30 PM
Last Updated : 14 Sep 2016 02:30 PM

மே.இ.தீவுகள் அணி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கம்

மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையை அந்த அணி வென்ற 6 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2015 உலகக்கோப்பைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் ஆட மே.இ.தீவுகள் துபாய் செல்லவுள்ள நிலையில் நீக்கப்பட்டுள்ளார்.

நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தெரிவிக்காத மே.இ.தீவுகள் வாரியம், “சமீப காலங்களில் அவர் பொதுவெளியில் தெரிவித்த கருத்துக்கள் உள்ளுக்குள் அவரது அணுகுமுறை மற்றும் உத்தி சார்ந்த காரணங்களுக்காக அவர் நீக்கப்பட வேண்டிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளராக அவரது பங்களிப்பு நன்றியைத் தெரிவித்து கொள்கிறது” என்று கூறியுள்ளது.

இலங்கை தொடருக்கு டிவைன் பிராவோ, கெய்ரன் பொலார்ட் ஆகியோரை தேர்வு செய்யாதது குறித்து சிம்மன்ஸ் விமர்சனம் செய்ய கடந்த செப்டம்பரில் குறுகிய காலத்திற்கு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவர் மன்னிப்பு கேட்டதையடுத்து மீண்டும் பதவியில் நியமிக்கப்பட்டார்.

அணி மேலாளர் ஜொயெல் கார்னர், பயிற்சியாளர்கள் ஹெண்டர்சன் மற்றும் டாடி எஸ்ட்விக் ஆகியோர் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அணியின் பயிற்சிகளை கவனித்துக் கொள்வார்கள் என்று மே.இ.தீவுகள் கூறியுள்ளது.

சிம்மன்ஸ் நீக்கத்திற்கு எதிராக டேரன் சமி தனது பேஸ்புக்கில் பதிவிடும் போது, “கண்ணில்லாதவர் கண்ணில்லாதவர்களை வழிநடத்திச் சென்றால் குழியில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று வாரியத்தைச் சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x