Published : 18 Mar 2017 10:11 AM
Last Updated : 18 Mar 2017 10:11 AM

இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி: ராஞ்சி துளிகள்

இந்திய மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்மித் (178) பெற்றார். இதற்கு முன்னர் டீன் ஜோன்ஸ் 210, மேத்யூ ஹைடன் 203 ரன்கள் எடுத்திருந்தனர்.

*

இந்திய மண்ணில் ஸ்மித்தையும் சேர்த்து இதுவரை வெளிநாட்டு கேப்டன்கள் 5 பேர் 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். கிளைவ் லாயிடு, அலாஸ்டர் குக், ஆல்வின் காலிச்சரண், இன்சமாம் உல்-ஹக் ஆகியோரும் இதில் அடங்குவர்.

*

இந்திய மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பெருமையையும் ஸ்மித் பெற்றார். இதற்கு முன்னர் மைக்கேல் கிளார்க் 130 ரன்கள் எடுத்திருந்தார்.

*

டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடியது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2015-ல் கிங்ஸ்டன் டெஸ்டிலும் அவர் 361 பந்து களை எதிர்கொண்டிருந்தார்.

*

ஸ்மித் 150 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 6-வது முறையாகும். இதில் அவர் 3 முறை இந்தியாவுக்கு எதிராக 150 ரன்களை கடந்துள்ளார்.

*

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்னர் 8 ஆட்டங்களில் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டையில் முடிவடைந்தது. இரு ஆட்டம் டிரா ஆனது.

*

இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப் பற்றுவது இது 8-வது முறை யாகும். இதன் மூலம் அவர் வினோ மங்கட்டின் சாதனையை சமன் செய்தார்.

*

மூன்று வடிவிலான கிரிக் கெட் போட்டியிலும் சதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார். இதற்கு முன்னர் இந்த சாதனையை ஷேன் வாட்சன் நிகழ்த்தியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x