Last Updated : 17 Aug, 2016 09:11 AM

 

Published : 17 Aug 2016 09:11 AM
Last Updated : 17 Aug 2016 09:11 AM

தூதரக விழாவில் பங்கேற்பு: வேர் கடலையை கொரித்துவிட்டு பசியோடு திரும்பிய ஹாக்கி அணி

பிரேசிலில் உள்ள இந்திய தூதர கத்தில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணி வீரர்கள் இரு பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.

தூதரக விழா என்பதால் விருந்து இருக்கும் என கருதிய வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் வழங்கப்பட்ட இரவு உணவை தவிர்த்தனர். கோபகாபனா நகரில் நடைபெற்ற விழாவில் வீரர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். விழாவும் இனிதாக நிறைவு பெற கடைசியில் சாப்பிட சென்ற போது தான் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சியடைந் தனர்.

மதுபான வகைகள், குளிர் பானங்கள் ஆகியவற்றுடன் வேர் கடலை ஆகியவை மட்டுமே இருந்தது. வேறு வழியில்லாமல் வேர்கடலையை மட்டும் கொரித்து விட்டு அங்கிருந்து பசியோடு ஒலிம்பிக் கிராமத்துக்கு திரும்பினர்.

இதுகுறித்து ஹாக்கி அணி வீரர் ஒருவர் கூறும்போது, ‘‘இரவு உணவை எதிர்பார்த்தோம். ஆனால் மதுபானங்கள், குளிர் பானம் ஆகி யவற்றுடன் வேர் கடலை மட்டுமே உணவு வகையில் இருந்தது. இது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இந்த விழாவை நம்பி ஒலிம்பிக் கிரா மத்தில் எங்களுக்கு வழங்கப்பட இருந்த உணவையும் ரத்து செய்தி ருந்தோம்’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x