Published : 22 Oct 2014 02:57 PM
Last Updated : 22 Oct 2014 02:57 PM

மிட்செல் ஜான்சன் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல: வக்கார் யூனிஸ்

வேகப்பந்து வீச்சில் கலக்கி வரும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் பற்றி வக்கார் யூனிஸ் கூறுகையில், ‘அவர் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல’ என்று கூறியுள்ளார்.

"நான் வாசிம் அகரமுடன் ஒருவரையும் ஒப்பிட மாட்டேன், இதில் உறுதியாக இருக்கிறேன், அவர் ஒரு பெரிய பவுலர், பாகிஸ்தானுக்காக பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார்.

எனவே மிட்செல் ஜான்சனை வாசிம் அகரமுடன் ஒப்பிட வேண்டுமென்றால் ஜான்சன் இன்னும் நீண்ட தூரம் வந்தாக வேண்டும். ஆனால் ஜான்சன் ஒரு அச்சுறுத்தல்தான், சிறந்த பவுலர்தான்.

கடந்த சில போட்டிகளில் அவரது பந்து வீச்சில் மாற்றம் தெரிகிறது, அவர் தாக்குதல் முறையில் வீசுகிறார். இதனால் வெற்றி அடைந்துள்ளார்.

ஜான்சனை சிறு சிறு ஸ்பெல்களில் பயன்படுத்துவார்கள் என்பதும் தெரியும் அவர் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதும் தெரியும்.” என்றார் வக்கார் யூனிஸ்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x