Published : 28 Oct 2015 10:27 AM
Last Updated : 28 Oct 2015 10:27 AM

இந்திய அணி தோனி தலைமையில் 2015ல் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை

தோனி தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் ஒருநாள் போட்டி தொடர்களில் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு உச்சங்களுக்கு கொண்டு சென்ற தோனிக்கு இந்த ஆண்டு கடும் சோதனையாகவே அமைந்துள்ளது. 2007ல் டி20 உலககோப்பை, 2011ல் 50 ஓவர் உலககோப்பை ஆகியவற்றை தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பின்னர் இந்திய அணிக்கு பல்வேறு ஏற்றங்கள் காணப்பட்டது. வெளிநாட்டு தொடர் களிலும் தோனி தலைமையில் இந் திய அணி பிரகாசிக்கத் தொடங் கியது. தோனி களத்தில் வகுக்கும் வியூகங்களுக்கு கைமேல் பலனும் கிடைத்து வந்தது.

தோனியை அனைவரும் தலை யில் தூக்கி வைத்து கொண்டாடி னர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. ஒரே மாதிரியான வியூகங்கள், தொடர்ச்சியாக சரி யாக ஆடாத வீரர்களை (ரெய்னா, ரவீந்திர ஜேடேஜா) அப்படியே அணியில் நீடிக்கச் செய்தது, இளம் வீரர்களை அடையளாம் கண்டு அவர்களை அணிக்கு கொண்டு வர முயற்சி செய்யாதது ஆகியவற் றுக்கான பலனை தான் தற்போது தோனி அனுபவித்து வருகிறார்.

இந்த ஆண்டில் தோனி தலை மையில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்பது நிதர் சனமான உண்மை. கடந்த ஜனவரி மாதம் இந்திய அணி ஆஸ்தி ரேலியாவில் நடைபெற்ற 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றன. இதில் இந்திய அணி இறுதி போட்டிக்கு கூட முன்னேறவில்லை. ஏன் லீக் ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.

அடுத்து பிப்ரவரி மாதம் நடை பெற்ற 50 ஓவர் உலககோப்பையில் திக்கி, முக்கி அரையிறுதி வரை முன்னேறியது. மோசமான பந்து வீச்சை வைத்துக்கொண்டு இந்திய அணி அந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேறியதோடு சரி. அடுத்த ஜூன் மாதம் வங்கதேசத் துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 ஆட்டத் திலும் தோல்வியை தழுவி கோப் பையை தாரை வார்த்தது தோனி அணி. இந்த 2 ஆட்டத்திலும் இந்திய அணி குறைந்த அளவிலான ஸ்கோரையே (228, 200) பதிவு செய்தது.

அடுத்து தற்போது தென் ஆப் பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. ஒரே ஒரு ஆறுதலான விஷயம் இந்த ஆண்டில் இந்திய அணி ஜிம் பாப்வே ஒருநாள் போட்டி தொடரில் கோப்பையை வென்றது மட்டுமே. அதுவும் ரஹானே தலைமையில் 2ம் தர அணியே ஜூலை மாதம் ஜிம்பாப்வே சென்று அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

ஒரே ஒரு ஆறுதலான விஷயம் இந்த ஆண்டில் இந்திய அணி ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி தொடரில் கோப்பையை வென்றது மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x