Last Updated : 07 Sep, 2016 08:26 PM

 

Published : 07 Sep 2016 08:26 PM
Last Updated : 07 Sep 2016 08:26 PM

இந்தியாவுக்கு எதிரான 2001 டெஸ்ட் தொடர் அசாதாரணமானது: ரிக்கி பாண்டிங் நெகிழ்ச்சிப் பகிர்வு

2001-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் தொடர் தான் விளையாடியதில் மறக்க முடியாத அசாதாரணமான டெஸ்ட் தொடர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

“2001 டெஸ்ட் தொடர் நான் விளையாடியதிலேயே அசாதாரணமான ஒரு டெஸ்ட் தொடராகும். நாங்கள் தோல்வியடைந்தோம், ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தின் தரம், அதன் தீவிரம், தொடர் முழுதும் ரசிகர்களின் கூட்டம் என்று மறக்க முடியாத அசாதாரணாமான நம்ப முடியாத ஒரு டெஸ்ட் தொடராகும் அது.

அனைத்தும் முடிந்து கொல்கத்தாவிற்கு சென்றோம்.. வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேயை கேட்டால் கொல்கத்தா டெஸ்ட் போட்டியை அவர் மறக்க முடியாத போட்டி என்றே கூறுவார். லஷ்மண், திராவிட் பாலோ ஆன் கொடுத்த பிறகு ஆடிய இன்னிங்ஸ், மீண்டும் இந்தியா பந்து வீசி எங்களை வீழ்த்தியது. இது எங்களது கர்வமான கணம் அல்ல, ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு நிச்சயம் இது கர்வம் சேர்க்கும் ஒரு கணமாகும். சென்னையிலும் வென்றனர் இந்திய அணியினர், மிகவும் அபாரமான தொடர் அது” என்றார் ரிக்கி பாண்டிங்.

கங்குலி கேப்டன்சியில் இந்தியாவின் டெஸ்ட் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய தொடராகும் அது.

தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா தொடர் குறித்து...

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இரு அணிகளுமே தற்போது சரிசமமான நிலையில் இருக்கின்றன. இருவரிடத்திலும் நல்ல வேகப்பந்து வீச்சு உள்ளது. மிட்செல் ஸ்டார்க் தனது ஆட்டத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் டேல் ஸ்டெய்ன் மீண்டும் சிறப்பான பந்து வீச்சுக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய நல்ல அறிகுறியாகும்.

ஹஷிம் ஆம்லா, டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் உலகத்தரம் வாய்ந்தவர்கள். ஆஸ்திரேலியா எப்போது தென் ஆப்பிரிக்காவுடன் மோதினாலும் அது ஒரு நல்ல போட்டித்தன்மை கொண்ட தொடராகவே இருக்கும். எனவே இது ஒரு அருமையான தொடராகும், அதற்காகக் காத்திருக்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் பாண்டிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x