Last Updated : 29 Jun, 2017 05:06 PM

 

Published : 29 Jun 2017 05:06 PM
Last Updated : 29 Jun 2017 05:06 PM

மார்கஸ் பகதாதீஸுடன் போராடி தோற்றார் இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன்

அந்தால்யா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் அபாரமாக ஆடி அனுபவமிக்க சைப்ரஸ் வீரர் மார்கஸ் பகதாதீஸுக்கு எதிராக போராடி தோல்வியுற்றார்.

7-6, 3-6, 6-7 என்ற செட்கணக்கில் ராம்குமார் ராமநாதன் தோற்றாலும் கடைசி இரண்டு புள்ளிகள் வரை பகதாதீசுக்கு சவால் அளித்தார்.

அன்று உலகத் தரவரிசை 8-ம் நிலையில் உள்ள டோனிமிக் தியெமை வீழ்த்தி ராம்குமார் ராமநாதன் உலக டென்னிஸ் ரசிகர்களை தன் பக்கம் கவனம்பெறச் செய்தார்.

கடைசி 3 பாயிண்ட்கள் வரை பகதாதீஸுக்கு ஸ்ட்ரோக்கு ஸ்ட்ரோக் பதிலடி கொடுத்து வந்த ராம்குமார் 10 ஏஸ் சர்வ்களை அடித்தார், மாறாக பகதாதீஸ் 9 ஏஸ் சர்வ்களையே அடிக்க முடிந்தது.

ஆனால் முன்னாள் உலக 8-ம் தரவரிசை வீரரான பகதாதீஸ் அவ்வளவு எளிதான வீரரல்ல, தன் முதல் சர்வை பக்காவாக வீசுவதில் இவர் வல்லவர், மாறாக ராம்குமார் முதல் சர்வில் 42% மட்டுமே சரியாக வீச முடிந்தது, மேலும் 11 முறை சர்வில் டபுள் ஃபால்ட் செய்தார் ராம்குமார். மேலும் ராம்குமார் ஒரேயொரு பிரேக் பாயிண்ட்டை மட்டுமே வெற்றியாக மாற்ற முடிந்தது, மாறாக பகதாதீஸ் 3 பிரேக் பாயிண்ட்களை வெற்றியாக மாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x