Published : 19 Sep 2016 09:49 AM
Last Updated : 19 Sep 2016 09:49 AM

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் பட்டம் வென்றது

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங் கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருவள்ளூர் வீரன்ஸ், காஞ்சி வாரியர்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிரா கன்ஸ், கோவை கிங்ஸ், காரைக் குடி காளை, மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், தூத் துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. இந்த 2 அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் சென்னை சேப் பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

டாஸில் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபினவ் முகுந்தும், கவுசிக் காந்தியும் ஆரம்பம் முதலே சேப்பாக் அணி வீரர்களின் பந்துகளை நொறுக்கித் தள்ளினர். பவுண்டரிகளும் சிக்சர்க ளுமாக விளாசித் தள்ளிய அவர் கள், முதல் விக்கெட்டுக்கு 132 ரன்களைச் சேர்த்தனர். இந்நிலை யில் 59 ரன்களை எடுத்திருந்த கவுசிக் காந்தி, சாய் கிஷோரின் பந்தில் சரவணனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். முதல் விக்கெட் விழுந்ததால் தூத்துக்குடி அணியின் ரன் எடுக்கும் வேகம் குறையும் என்று சேப்பாக் வீரர்கள் கருதினர். ஆனால் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய தினேஷ் கார்த்திக், அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கினார்.

4 சிக்சர்கள், 5 பவுண்டரிகளை விளாசிய தினேஷ் கார்த்திக் (55 ரன்கள்) தூத்துக்குடி அணியின் ரன் வேகத்தை மேலும் அதிகப் படுத்தினார். மறுபுறம் அபினவ் முகுந்தும் சளைக்காமல் மட் டையைச் சுழலவிட்டு 82 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருக்க, தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

கடினமான இலக்கை துரத்த வேண்டிய நிலையில் ஆடவந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 4 விக்கெட்களை பறிகொடுத்தது. கணேஷ்மூர்த்தி வீசிய அந்த ஓவரில் தலைவன் சற்குணம், கோபிநாத், சதீஷ், சசிதேவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். இந்த மாபெரும் சரிவில் இருந்து அணியை மீட்கும் முயற்சியில் சரவணனும், யோமகேஷும் ஈடுபட்டனர். ஆனால் 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் யோமகேஷ் அவுட் ஆக சேப்பாக் அணி மீண்டும் திணறியது. அந்த அணி 7.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

மழைக்கு பிறகு ஆடவந்த சேப்பாக் அணி, தோல்வி உறுதி என்ற நிலையில் சுரத்தில்லாமல் ஆடியது. அந்த அணி 18.5 ஓவரிகளில் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x