Last Updated : 04 Feb, 2017 10:01 AM

 

Published : 04 Feb 2017 10:01 AM
Last Updated : 04 Feb 2017 10:01 AM

சுழற்பந்து வீச்சில் விளையாட தெரியாவிட்டால் இந்தியா செல்லாதீர்கள்: ஆஸ்திரேலிய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை

சுழற்பந்து வீச்சில் விளையாடு வதற்கு விரைவில் கற்றுக்கொள் ளுங்கள் இல்லாவிட்டால் இந்திய சுற்றுப்பயணத்தை தவிர்த்து விடுங்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அறிவுரை கூறியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி புனேவில் தொடங்குகிறது.

இந்நிலையில் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இணையளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப் பதாவது:

சுழற்பந்து வீச்சில் விளையாட விரைவாக கற்றுக்கொள்ளுங்கள். உங்களால் சுழற்பந்து வீச்சில் விளையாட முடியாவிட்டால், இந்தியா செல்ல வேண்டாம். நீங்கள் இந்தியா சென்ற பிறகு அங்கு பயிற்சியில் ஈடுபடுவீர்கள். இது வழக்கமான நடைமுறைதான். ஆனால் அதனை நீங்கள் ஆஸ்தி ரேலியாவிலேயே செய்யலாம்.

சுழற்பந்து வீச்சில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து என்னால் ஆஸ்திரேலியா விலேயே பயிற்சி அளிக்க முடியும். சுழற்பந்து வீச்சில் முறையாக விளையாடுவதற்கு சுழல் ஆடுகளம் தான் தேவை என்பதும் அதில்தான் பயிற்சி பெற வேண்டும் என்பது இல்லை. நீங்கள் எந்த வகையிலான ஆடுகளத்திலும் விளையாடலாம். அனைத்துமே கால் நகர்வுகளை எப்படி மேற்கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் உள்ளது.

காலை முன்னால் கொண்டு சென்று ஒருபோதும் பேட் செய்யக் கூடாது. பந்துக்காக காத்திருந்து பேட் செய்ய வேண்டும். எந்த இடத்தில் பந்து பிட்ச் ஆகிறது என்பதை கவனித்து விளையாட வேண்டும். 150 கி.மீ. வேகத்தில் வீசப்படும் பந்தில் சிறப்பாக விளையாடும் உங்களால், 50 மைல்கள் வேகத்தில் வீசப்படும் பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த திறனை வெளிப்படுத்தி நல்ல நிலையை அடைய முடியும்.

இவ்வாறு பீட்டர்சன் கூறியுள் ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு இங்கி லாந்து அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அப்போதைய இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த கெவின் பீட்டர்சன் 48.29 சராசரி யுடன் 338 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி 2004-ம் ஆண்டுக்கு பிறகு தெற்கு ஆசிய பகுதிகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற தில்லை. மேலும் அந்த அணி 20 டெஸ்ட் போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் இரு வெற்றிகள் வங்கதேச அணிக்கு எதிரானவையாகும்.

தற்போது அணியில் உள்ள வீரர்களில் இருவர் மட்டுமே ஆசிய மைதானங்களில் 40-க்கும் மேற்பட்ட ரன்குவிப்பு சராசரி வைத் துள்ளனர். சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் 0-3 என படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ் ஆகியோர் மட்டுமே அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 60 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களி லேயே ஆட்டமிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x