Last Updated : 10 Feb, 2017 10:47 AM

 

Published : 10 Feb 2017 10:47 AM
Last Updated : 10 Feb 2017 10:47 AM

மீண்டும் மலிங்கா

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையே மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருந்தார்.

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதல் டி20 ஆட்டம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.



அசார் அலி விலகல்

பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அசார் அலி விலகி உள்ளார். இதுதொடர்பாக அவர் வாரிய தலைவர் சஹாரியார் கானை துபையில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து டி20 அணியின் கேப்டனாக உள்ள விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவே ஒருநாள் போட்டிக்கும் கேப்ட னாக பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x