Published : 24 Feb 2017 03:04 PM
Last Updated : 24 Feb 2017 03:04 PM

இந்திய அணியின் படுமோசமான சரிவு: சில புள்ளி விவரங்கள்

புனே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்தியா 11 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களுக்குச் சுருண்டது. இது மிகமோசமான சரிவு ஆகும்.

94/3 என்ற நிலையிலிருந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கிறைஸ்ட்சர்ச்சில் 1989-90 தொடரில் இந்திய அணி 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்ததற்குப் பிறகு மோசமான சரிவாகும்.

19 பந்துகளில் ஸ்டீவ் ஓகீஃப் வீழ்த்திய 5 விக்கெட்டுகள் இந்தியாவுக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் 16 பந்துகளில் 2011-ல் எடுத்த 5 விக்கெட்டுகளை சமன் செய்துள்ளது. இம்ரான் கான் 1982-83 தொடரில் 19 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஓகீஃபின் 6/35 என்பது இந்தியாவுக்கு வந்து ஆடும் அணியின் இடது கை ஸ்பின்னரின் 3-வது சிறந்த பந்து வீச்சாகும். முன்னதாக 1934-ல் சென்னையில் ஹெட்லி வெரிட்டி 7 விக்கெட்டுகளை 49 ரன்களுக்கு வீழ்த்தியதுதான் இன்று வரை முதலிடம் வகிக்கிறது. 2004-ல் மைக்கேல் கிளார்க் 9 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2008-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் இந்திய அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதற்குப் பிறகு இது குறைவான ரன் எண்ணிக்கையாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் 3-வது குறைந்த ரன் எண்ணிக்கையாகும் இது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் 4-வது குறைந்த ஸ்கோராகும் இது. 1947-48 தொடரில் பிரிஸ்பனில் 58 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டிருக்கிறது இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2004-05 தொடரில் 104 ரன்களுக்குச் சுருண்டதே குறைவானதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x