Published : 16 Sep 2016 09:29 AM
Last Updated : 16 Sep 2016 09:29 AM

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் செர்ஜியோ அகுயேரோ அடித்த ஹாட்ரிக் கோல்களின் உதவியால் மான்செஸ்டர் சிட்டி அணி பொரூஷியா அணியை வென்றது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியும் பொரூஷியா அணியும் மோதின. இப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ஆடிய அர்ஜென்டினா வீரர் செர்ஜியோ அகுயேரோ ஆட்டத்தின் ஆரம்பம் முதலே எதிரணியின் கோல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்களை நடத்தினார். முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல்களையும், இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஒரு கோலையும் அடித்த இவர், ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவரது ஹாட்ரிக் சாதனையின் உதவியால் மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்றது.

மாட்ரிட் நகரில் நடந்த மற்றொரு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் லிஸ்பன் அணியுடன் ரியல் மாட்ரிட் அணி மோதியது. கடும் போட்டியைக் கொண்ட இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணிக்கு சவால் விடும் வகையில் லிஸ்பன் அணி ஆடியது. ஒரு கட்டத்தில் லிஸ்பன் அணி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னணியில் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வாரோ மொராடா ஆகியோர் அடித்த கோல்களின் உதவியால் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றியை ருசித்தது.

ஜுவென்டஸ் அணிக்கும் செவில்லா அணிக்கும் இடையே மிலன் நகரில் நடந்த மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் இரு அணிகளும் கோல் எதையும் அடிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x