Last Updated : 29 Apr, 2017 09:34 AM

 

Published : 29 Apr 2017 09:34 AM
Last Updated : 29 Apr 2017 09:34 AM

நேர்மறையான ஆட்டத்தால் நெருக்கடியை தவிர்க்கலாம்: விராட் கோலி கருத்து

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத் தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக பவன் நெகி 32, கேதார் ஜாதவ் 31, அனிகெட் சவுத்ரி 15 ரன்கள் எடுத்தனர். முன்னணி வீரர்களான விராட் கோலி 10, கிறிஸ் கெயில் 8, டிரெவிஸ் ஹெட் 0, டி வில்லியர்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். குஜராத் அணி தரப்பில் ஆன்ட்ரூ டை 3, ஜடேஜா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து 135 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி 13.5 ஓவர்களில் 3 விக்கெட் களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஆரோன் பின்ச் 34 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரி களுடன் 72 ரன்கள் குவித்தார். சுரேஷ் ரெய்னா 34, இஷான் கிஷன் 16, மெக்கலம் 3, ஜடேஜா 2 ரன்கள் சேர்த்தனர். குஜராத் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் பெங்களூரு அணி 6-வது தோல்வியை சந்தித்தது.

வெற்றி குறித்து குஜராத் அணி யின் கேப்டன் ரெய்னா கூறும் போது, “புதிய பந்தில் விரைவாக விக்கெட்களை வீழ்த்த முடிந்தது. ஆன்ட்ரூ டை ஓரே ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்களை (கெய்ல், டிரெவிஸ் ஹெட்) வீழ்த்தியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. பாசில் தம்பி, நது சிங் ஆகியோரும் துல்லியமாக பந்துகளை வீசினர்.

அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஜடேஜா, பாக்னரும் சிறப்பாக செயல்பட்டனர். பேட்டிங்கில் ஆரோன் பின்ச் மிக அற்புதமாக விளையாடினார். அணியின் கூட்டு முயற்சியாலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி எங்களுக்கு தன்னம்பிக்கையை தருவதாக உள்ளது” என்றார்.

தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து வெளியே வர முடியும். நாங்கள் அணிக்கு அதிக அழுத்தம் கொடுக் கிறோம். தனிப்பட்ட முறையில் வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

பந்துகள் மட்டைக்கு அருமை யாகவே வந்தன. இதனால் பேட்டிங் சரிவுக்கு எந்தவித காரணமும் கற்பிக்க விரும்பவில்லை. ஆரோன் பின்ச் பிரமாதமாக விளை யாடினார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x