Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM

மகளிர் ஸ்குவாஷ்: இந்த ஆண்டு கிடையாது

மகளிருக்கான உலக ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படமாட்டாது என்று சர்வதேச மகளிர் ஸ்குவாஷ் சங்கம் தெரிவித்துள்ளது.

1991-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இப்போட்டி, இந்த ஆண்டுதான் முதல்முறையாக ரத்து செய்யப்படுகிறது.

இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள சர்வதேச மகளிர் ஸ்குவாஷ் சங்கம், போட்டி நடத்தப்படாததற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

எனினும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 2013-ம் ஆண்டுக்கான போட்டியும், இறுதியில் 2014-ம் ஆண்டுக்கான போட்டியும் நடத்தப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x