Last Updated : 17 Jul, 2016 12:11 PM

 

Published : 17 Jul 2016 12:11 PM
Last Updated : 17 Jul 2016 12:11 PM

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா - பயஸ் - போபண்ணா ஜோடி அபார வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1 பிரிவில் தென் கொரி யாவை இந்திய அணி 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா ஜோடி அபார வெற் றியை பதிவு செய்தது.

சண்டிகரில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1 பிரிவில் இந்தியாவும், தென் கொரி யாவும் மோதின. இதில் நேற்று முன்தினம் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமாரும், மைனேனியும் வெற்றி பெற்றனர். இதனால் இந்தத் தொடரில் இந்திய அணி 2 - 0 என்ற முன்னிலையை பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா ஜோடி தென்கொரியாவின் சியாங் சான் ஹாங் - ஹாங் சங் ஜோடியை எதிர்த்து ஆடியது. இந்த போட்டி யில் அனுபவம் வாய்ந்த இந்திய ஜோடி 6 3 6 4 6 4 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற பயஸ் - போபண்ணா ஜோடி 1 மணி 41 நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொண்டது. இந்த போட்டியின்போது இந்திய ஜோடி தங்கள் சர்வீசில் 17 புள்ளி களை மட்டுமே இழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என்ற முன்னிலையைப் பெற்றது. இதன் மூலம் இந்திய அணி டேவிஸ் கோப்பை டென் னிஸ் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஒலிம்பிக் நம்பிக்கை

லியாண்டர் பயஸுக்கும் ரோஹன் போபண்ணாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டு களாக கருத்து வேறுபாடு இருந்த தாக கூறப்படுகிறது. இதன் காரண மாக ரியோ ஒலிம்பிக்கில் இரட்டை யர் பிரிவு டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸுடன் ஜோடி சேர்ந்து விளையாட ரோஹன் போபண்ணா தயங்கிவந்தார். பின்னர் இந்திய டென்னிஸ் சங்கத்தின் வேண்டுகோளுக் கிணங்க பயஸுடன் ஜோடி சேர்ந்து விளையாட அவர் சம்மதித்தார்.

ஒலிம்பிக்கில் ஜோடி சேர்ந்து விளையாடுவதாக முடிவெடுத்த பிறகு பயஸ் - போபண்ணா ஜோடி ஆடும் முதலாவது இரட் டையர் போட்டியாகும் இது. இப் போட்டியில் இந்த ஜோடி கருத் தொற்றுமையுடன் விளையாடி அபார வெற்றி பெற்றதன் மூலம் ஒலிம்பிக்கில் இவர்கள் பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய ஆட்டம் குறித்து பயஸ் - போபண்ணா ஜோடி நிருபர் களிடம் கூறியதாவது:

இரட்டையர் போட்டியில் எங்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக இருந்தது. மூன்று செட்களில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத் தில் எங்கள் ஆட்டத்தின் தரத்தை மேலும் கூட்டவேண்டும் என்று கருதுகிறோம். ஆசியாவின் மிகச் சிறந்த டென்னிஸ் அணிகளில் ஒன்றான தென்கொரியாவை 3-0 என்ற கணக்கில் வென்றது திருப்தியளிக்கிறது. இந்த போட்டித் தொடரில் ராம்குமார், மைனேனி ஆகியோரும் சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x