Published : 02 Jan 2017 10:12 AM
Last Updated : 02 Jan 2017 10:12 AM

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி முதல் நாளில் 261/6

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான அரை இறுதியில் தமிழக அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது.

ராஜ்கோட்டில் நேற்று தொடங் கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான கங்கா தர் ராஜூ 19, கேப்டன் அபிநவ் முகுந்த் 38 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

68 ரன்களுக்கு 2 விக்கெட் களை இழந்த நிலையில் கவுசிக் காந்தியுடன் இணைந்த பாபா இந்திரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திரஜித் 114 பந்துகளில், 9 பவுண்டரி களுடன் 64 ரன்கள் எடுத்த நிலை யில் தாக்குர் பந்தில் ஆட்டமிழந் தார். இந்த ஜோடி 3-வது விக்கெட் டுக்கு 110 ரன்கள் சேர்த்தது.

சிறிது நேரத்தில் கவுசிக் காந்தி 50 ரன்களில் அபிஷேக் நாயர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத் தார். அவர் 137 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை சேர்த்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 16, பாபா அபராஜித் 9 ரன்களில் ஆட்ட மிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

நேற்றைய ஆட்டத்தின் முடி வில் தமிழக அணி 90 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. சங்கர் 41, அஸ்வின் கிரைஸ்ட் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க தமிழக அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.

குஜராத்

நாக்பூரில் நடைபெற்ற மற் றொரு அரை இறுதியில் குஜராத்-ஜார்க்கண்ட் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 88 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது.

கோஹெல் 18, மேராய் 39, கேப் டன் பார்த்தீவ் படேல் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரரான பன்சால் 252 பந்து களில் 21 பவுண்டரிகளுடன் 144 ரன்களுடனும், ஜூனிஜா 12 ரன் களுடனும் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x