Published : 17 Mar 2014 12:00 AM
Last Updated : 17 Mar 2014 12:00 AM

சென்னை கால்பந்து லீக்: 27-ம் தேதி தொடக்கம்

சென்னை கால்பந்து லீக் போட்டிகள் வரும் 27-ம் தேதி தொடங்குகின்றன. சென்னை கால்பந்து சங்கத்துக்கு புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை கால்பந்து லீக் போட்டிகளுக்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் டிவிசன் போட்டிகள் வரும் 27-ம் தேதியும், சீனியர் டிவிசன் போட்டிகள் வரும் 30-ம் தேதியும் தொடங்குகின்றன. 27, 28, 29 ஆகிய 3 நாள்களும் தலா இரண்டு முதல் டிவிசன் போட்டிகள் நடைபெறும்.

வரும் 30-ம் தேதி முதல் தொடக்க ஆட்டமாக முதல் டிவிசன் போட்டியும், அதைத் தொடர்ந்து சீனியர் டிவிசன் போட்டியும் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் நேரு மைதானத் தில் நடைபெறுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டும் மின்னொளியில் போட்டிகள் நடைபெறும்.

2-வது மற்றும் 3-வது டிவிசன் போட்டிகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளன. இந்தப் போட்டிகள் நேரு மைதானத்தின் பி ஆடுகளத்திலும், நேரு பார்க்கிலும் நடைபெறும். 4-வது டிவிசன் போட்டிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். சென்னை கால்பந்து போட்டிக்கு தொடர்ந்து 6-வது ஆண்டாக செயின்ட் ஜோசப் கல்லூரி அணி ஸ்பான்சர் செய்கிறது என சென்னை கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x