Published : 02 Sep 2016 08:09 PM
Last Updated : 02 Sep 2016 08:09 PM

நாசர் ஹுசைனின் நடப்பு உலக ஒருநாள் அணியில் 3 இந்திய வீரர்கள்

இங்கிலாந்து-பாகிஸ்தான் 4-வது ஒருநாள் போட்டி முடிந்ததையடுத்து முன்னாள் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தன்னுடைய தற்கால உலக ஒருநாள் லெவன் அணியை அறிவித்துள்ளார்.

இதில் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே ஒரே இங்கிலாந்து வீரர்.

அணி விவரம் வருமாறு:

டேவிட் வார்னர், குவிண்டன் டி காக், ரோஹிஷ் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் பென் ஸ்டோக்ஸ், அஸ்வின், சுனில் நரைன், டேல் ஸ்டெய்ன், டிரெண்ட் போல்ட்.

தென் ஆப்பிரிக்காவின் சிறந்த வீரரான ஹஷிம் ஆம்லா, உலக சாதனை நாயகன் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோரை நாசர் ஹுசைன் சேர்க்காதது குறிப்பிடத்தக்கது, மே.இ.தீவுகளின் வளர்ந்து வரும் வீரர் ஒருவரும் இடம்பெறவில்லை. மிட்செல் ஸ்டார்க்கைச் சேர்க்காததும் ஆச்சரியமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x