Last Updated : 16 Sep, 2018 05:49 PM

 

Published : 16 Sep 2018 05:49 PM
Last Updated : 16 Sep 2018 05:49 PM

ஐசிஎல் தொடங்கும்முன் இப்படியா?- கேரள ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த சச்சின் டெண்டுல்கர்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், கேரளா பிளாஸ்டர் அணியின் 20 சதவீத பங்குகளை சச்சின் டெண்டுல்கர் வேறுஒருவருக்கு விற்பனை செய்து கேரள மக்களுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய சூப்பர்லீக் கால்பந்துப் போட்டிகள் தொடங்கியபின், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடக்கும் போது, கேரள பிளாஸ்டர் அணி விளையாடும் போது களத்துக்கு வந்து சச்சின் உற்சாகமூட்டுவார். இதனால், கால்பந்து போட்டியைக் காண்பதற்கும், சச்சினைக் காண்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் வரும்.

இந்நிலையில், கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்கான தன்னிடம் இருக்கும் 20 சதவீத பங்குகளை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் 80 சதவீத பங்குகள் கேபிஎப்சி நிறுவனம், நடிகர் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுனா ஆகியோரிடம் உள்ளது.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

‘‘கேரள பிளாஸ்டர் அணி வெற்றிகரமாக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த 5ஆண்டுகளுக்கு அணியை கட்டமைக்க இது முக்கியமான தருணம். அதேசமயம், என்னால் எந்தவிதமான பங்களிப்பையும், பணியையும் அளிக்க முடியும் என்பதற்கான நேரம். என்னுடைய அணி நிர்வாகத்துடன் தீவிரமாக ஆலோசனை நடத்தியபின், என்னுடைய அணியில் பங்குதாரர் குழுமத்தில் இருந்து விலகுவது என முடிவு செய்துள்ளேன்.

கேரள பிளாஸ்டர் அணியை விட்டு நான் விலகினாலும், என்மனது எப்போதும் கேரள பிளாஸ்டர்கை நினைத்துக்கொண்டே இருக்கும்.

கேரள பிளாஸ்டர்ஸ் அணி மிகச்சிறப்பான நிலைக்கு மாறும், அதிகமான வெற்றிகளைக் குவிக்கும், அதற்கு ரசிகர்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் என வலிமையாக நம்புகிறேன். கேரள பிளாஸ்டர்ஸ் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்.

கடந்த 4 ஆண்டுகளாகக் கேரள பிளாஸ்டர்ஸ் அணி எனது வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வந்தது. இந்த 4 ஆண்டுகளில் பல்வேறு உணர்ச்சி மிகு தருணங்களை ரசிகர்களுடன், வீரர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த 4 ஆண்டுகாலஅனுபவத்தை என்னால் மறக்க இயலாது. நான் கேரள பிளாஸ்டர்ஸ் அணியில் இல்லாவிட்டாலும் கூட எனது ஆதரவு எப்போதும் உண்டு ’’எனத் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்எல் போட்டி தொடங்கியதில் இருந்து விளையாடி வரும் கேரள பிளாஸ்டர்ஸ் அணி கடந்த 2014, 2016-ம்ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x