Published : 04 Sep 2018 16:46 pm

Updated : 04 Sep 2018 16:46 pm

 

Published : 04 Sep 2018 04:46 PM
Last Updated : 04 Sep 2018 04:46 PM

மே.இ.தீவுகள் அடுத்தமாதம் இந்தியா பயணம்: டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்பு: சென்னையில் ஒரு போட்டி

20

அடுத்த மாதத்தில்(அக்டோபர்) இருந்து 7 வாரங்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

ஆசியக் கோப்பை முடிந்தபின் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.


இந்தியாவில் அக்டோபர் மாதம் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி தொடங்கும் தொடர், நவம்பர் 11-ம் தேதிவரை நடக்கிறது.

இது குறித்து பிசிசிஐ அமைப்பின் செயலாளர் அமிதாப் சவுத்ரி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவுக்கு 7 வாரங்கள் மேற்கிந்தியத்தீவுகள் பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ராஜ்கோட்டில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கிறது.

அணிகள்(டெஸ்ட் தொடர்)தேதிஇடம்
இந்தியா-மே.இ.தீவுகள்அக்.4 -8ராஜ்கோட்
இந்தியா-மே.இ.தீவுகள்அக்.12-16ஹைதராபாத்

டெஸ்ட் தொடர் முடிந்தபின் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 21-ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2-வது போட்டி 24-ம்தேதி இந்தூரிலும், 3-வது ஒருநாள் போட்டி 27-ம் தேதி புனேயிலும் நடக்கின்றன.

4-வது ஒருநாள் போட்டி 29-ம் தேதி திருவனந்தபுரத்திலும், 5-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 1-ம் தேதி மும்பையிலும் நடக்கிறது.

அணிகள்(ஒருநாள் தொடர்)தேதிஇடம்
இந்தியா-மே.இ.தீவுகள்அக்.21கவுகாத்தி
இந்தியா-மே.இ.தீவுகள்அக்.24இந்தூர்
இந்தியா-மே.இ.தீவுகள்அக்.27புனே
இந்தியா-மே.இ.தீவுகள்அக்.29திருவனந்தபுரம்
இந்தியா-மே.இ.தீவுகள்நவ.1மும்பை

 

அதன்பின் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டி20 போட்டி நவம்பர் 4-ம் தேதி கொல்கத்தாவிலும், 2-வது ஆட்டம் நவம்பர் 6-ம் தேதி லக்னோவிலும், சென்னையில் நவம்பர் 11-ம் தேதி 3-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது.

அணிகள்(டி20 தொடர்)தேதிஇடம்
இந்தியா-மே.இ.தீவுகள்நவ.4கொல்கத்தா
இந்தியா-மே.இ.தீவுகள்நவ.6லக்னோ
இந்தியா-மே.இ.தீவுகள்நவ.11சென்னை

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 15-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இதில் வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இந்தியா, தகுதிச்சுற்றில் பங்கேற்கும் அணி என 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டித் தொடர் 28-ம் தேதிவரை நடக்கிறது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x