Published : 17 Sep 2018 08:05 PM
Last Updated : 17 Sep 2018 08:05 PM

தன் வாழ்நாளில் இதுவரை சந்திக்காத பயங்கர சாகசத்தில் ரோஜர் பெடரர்: சாகச நாயகன் கிரில்சுடன் கைகோர்த்து ஆல்ப்ஸ் மலையேற்றம்

டென்னிஸில் பல அரிய திறமைகளை வெளிப்படுத்தி பெரிய லெஜண்டாக டென்னிஸ் வரலாறு விதந்தோதும் ஒரு பெரிய வீரர் ரோஜர் பெடரர் தற்போது ரியாலிட்டி ஷோ ஒன்றுக்காக ஆல்ப்ஸ் மலையேற்றத்தில் சில சாகசங்களைச் செய்யவிருக்கிறார்.

இதற்காக உலக சாகசச் சாதனையாளர் பியர் கிரில்ஸுடன் கை கோர்த்துள்ளார் ரோஜர் பெடரர். ஒபாமாவையும் இவர் சாகசம் செய்ய வைத்துள்ளார்.கிரில்ஸ் பல்வேறு துறைகளில் கொடிநாட்டியவர்களின் பல்வேறு சாகசத் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் வல்லவர். கேம் ஆஃப் த்ரோன்ஸின் லீனா ஹெடி, டான் சீடில், அமெரிக்க நடிகர் ஜோசப் கார்டன், நடிகை ஊஸோ அடுபா, ஆகியோருடன் ரோஜர் பெடரரும் செப்டம்பர் 20ம் தேதி இந்திய நேரம் இரவு 9.00 மணிக்கு டிஸ்கவரி சேனல் மற்றும் டிஸ்கவரி வேர்ல்ட் ஹெச்.டி. ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் 'Running Wild with Bear Grylls' என்ற ரியாலிட்டி ஷோவில் மக்களைக் கவரவுள்ளார்கள்.

இந்தத் தொடரில் ரோஜர் பெடரர் முதல் ஷோவில் தன் சாகச திறமைகளை வெளிப்படுத்துகிறார்.

டென்னிஸ் ராக்கெட்டை வைத்துக் கொண்டு அவர் செய்த சாகசங்களை மறக்க முடியாத ரசிகர்களுக்கு ரோஜர் பெடரரின் இன்னொரு சாகசப் பக்கம் திறக்கவுள்ளது. பெடரரை ஒரு புதிய வழியில் அவரது ரசிகர்கள் அறியவுள்ளனர். அதாவது பெரிய பள்ளத்தில் ரோஜர் பெடரர் டைவ் அடிப்பதும், பச்சை மீனைச் சாப்பிடுவது வரை கடினமான விஷயங்களைச் செய்வதே காட்சியாகும்.

பியர் கிரில்ஸ், “இந்த அற்புத மலைத்தொடரிலிருந்து கீழே அடர்ந்த காட்டுக்கு வரும் போது... எதிர்கொண்டு மீள வேண்டிய சக்திகளாகும் இது.. ரோஜர் பெடரர் இதுவரை நீங்கள் ஆடாத போட்டிக்குத் தயாராகுங்கள்” என்கிறார்.

பெடரர் கூறும்போது, “சுவிஸ் மலைகளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போதே எனக்கு நாடித்துடிப்பு எகிறுகிறது. டென்னிஸ் மைதானத்தில் நான் ஒரு கடினமான மனிதனாகத் தெரியலாம், ஆனால் வாழ்க்கையில் பல விஷயங்களைக் கண்டு நான் பயந்திருக்கிறேன். ஆகவே எனக்கு பயங்கரம் காத்திருக்கிறது, பியர் கிரில்ஸ் என் கைகளை விட்டுவிடாதீர்கள், வெறுமனே டென்னிஸ் ஆடுவது மட்டும் வாழ்க்கையல்ல. மற்ற விஷயங்களும் செய்ய வேண்டியுள்ளது” என்றார் ரோஜர் பெடரர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x