Published : 08 Sep 2018 08:36 AM
Last Updated : 08 Sep 2018 08:36 AM

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ஹிருதய் ஹஸாரிகா:  இளவேனில் வெள்ளி பதக்கம் கைப்பற்றினார்

தென் கொரியாவின் சாங் வான் நகரில் 52-வது உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் பிரிவில் ஆடவருக் கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில், 16 வயதான ஹிருதய் ஹஸாரிகாவும், ஈரானின் அமிர் நியோக்னமும் தலாள 250.1 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்-ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஹிரு தய் ஹஸாரிகா 10.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 10.2 புள்ளிகள் பெற்ற அமிர் நியோக் னம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி னார். ரஷ்யாவின் கிரிகோரி ஷமகோவ் 228.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

மகளிருக்கான ஜூனியர் பிரி வில் 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தி யாவின் இளவேனில் வாளறிவன் 249.8 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரேயா அகர் வால் 228.4 புள்ளிகளுடன் வெண் கலப் பதக்கமும் கைப்பற்றினர். சீனாவின் ஷி மெங்யாவோ 250.5 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இள வேனில் வாளறிவன், ஸ்ரேயா அகர்வால், மணினி கவுசிக் ஆகி யோரை உள்ளடக்கிய இந்திய அணி 1880.7 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றது. இதில் இள வேனில் மட்டும் 631 புள்ளிகள் குவித் தார். ஜூனியர் உலகக் கோப்பை யில் இது புதிய சாதனையாகவும் அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x