Published : 06 Jun 2019 06:28 PM
Last Updated : 06 Jun 2019 06:28 PM

கிரிக்கெட்டில்தான் ‘சோக்கர்ஸ்’... ஹாக்கியிலுமா? - கத்துக்குட்டி அணியிடம் தெ.ஆ. அதிர்ச்சித் தோல்வி

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்தான் இங்கிலாந்து, வங்கதேசம், இந்திய அணிகளிடம் தோல்வி கண்டு இனி ஒவ்வொரு போட்டியுமே நாக் அவுட் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால், ஹாக்கியில் டாப் ராங்கில் இருந்தும் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் தோல்வி தழுவி அதிர்ச்சியளித்துள்ளது.

 

உலகத்தரவரிசையில் 25ம் இடத்தில் உள்ளது அமெரிக்கா,  டாப் ஹாக்கி அணிகளுடன் ஆடிய பழக்கமேயில்லாதது யு.எஸ்.ஏ அணி. ஆனால் இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தலையெழுத்தை மாற்றி எழுதியது யு.எஸ்.ஏ.

 

எஃப்.ஐ.எச். ஹாக்கி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் புவனேஷ்வரில் கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரிவு பி போட்டியில் கத்துக்குட்டி யு.எஸ்.ஏ அணியிடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்துள்ளது.

 

இந்த ஆட்டத்தில் முதல் 3 கால்மணி நேர ஆட்டத்ஹில் கோல்கள் இல்லை, ஆனால் கடைசி 15 நிமிடங்களில் 2 கோல்களை அடித்து 16ம் நிலையில் உள்ள தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

 

47வது நிமிடத்தில் கிறிஸ்டியன் டி ஆஞ்செலிஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். கடைசியில் ஆட்டம் முடிய 3 நிமிடங்களுக்கு முன்னதாக பால் சிங் களத்திலிருந்து நேரடியாக கோல் அடித்து 2வது கோலை அடிக்க தென் ஆப்பிரிக்க ஹாக்கி அணி வாயடைத்தது.

 

ஆட்டத்தின் படி பார்த்தால் தென் ஆப்பிரிக்க அணி அதிகம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர், அதிக முறை கோல்களை நோக்கி பந்தை அடித்தனர். இது போன்று ஆட்ட நிலவரங்கள் தென் ஆப்பிரிக்காவுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் 2 கோல்களை அடித்து வென்றது யு.எஸ்.ஏ. அணி.

 

உலக அணிகளில் டாப் அணிகளுடன் ஆடிப்பழக்கம் இல்லாத கத்துக்குட்டியுடன் ஹாக்கியிலும் தோல்வி தழுவி அங்கும் ‘சோக்கர்ஸ்’ என்ற முத்திரைக்குச் சொந்தமாகி வருகிறதோ தென் ஆப்பிரிக்கா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x