Published : 10 Jun 2019 08:26 AM
Last Updated : 10 Jun 2019 08:26 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிடைக்குமா? - மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் மோதல்

இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன், தென் ஆப்பிரிக்க அணி மோதவுள்ளது.

ஏற்கனவே 3 தோல்விகளை பெற்று மோசமான நிலையில் இருக் கும் தென் ஆப்பிரிக்கா இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சவுத்தாம்டனில் இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற வுள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியோ இதுவரை தான் மோதிய இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த அணி இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டுக்குப்பின், தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்ற எந்த உலகக் கோப்பைப் போட்டி யிலும் இதுபோன்று தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா, டூபிளெசிஸ், மார்கிரம், குயின்டன் டி காக், மில்லர், மோரிஸ், வேண்டர் டசன் ஆகி யோர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப் பாக விளையாடவில்லை. இன் றைய லீக் ஆட்டத்தில் தொடக்க வீரர் கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில், அதைத் தொடர்ந்து வரும் வீரர்களும் அபாரமாக விளையாடு வார்கள் என எதிர்பார்க்கலாம்.

அதைப் போலவே வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா, மோரிஸ், பெலுக்வாயோ, டசன், சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தகிர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.

அதே நேரத்தில் பாகிஸ் தானுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக வெற்றியைப் பெற்ற மேற்கு இந்தியத்தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்களில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

எனவே இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற முழு முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. கிறிஸ் கெயில், லெவிஸ், ஹோல்டர், ஹோப், ஹெட்மயர், ரஸ்ஸல் ஆகியோரிடமிருந்து சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப் போலவே பவுலிங்கில் தாமஸ், ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வெயிட், ஹோல்டர், காப்ரியேல் ஆகியோர் மிரட்டி வருகின்றனர். எனவே இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x