Last Updated : 14 Jun, 2019 11:05 AM

 

Published : 14 Jun 2019 11:05 AM
Last Updated : 14 Jun 2019 11:05 AM

ஷிகர் தவணால் பீல்டிங் செய்ய முடியுமா ?- பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் சொல்வது என்ன

கைவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள தவண், காயம் குணமடைந்தாலும் பீல்டிங் செய்ய முடியுமா என்பது குறித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமான வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவண், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் பந்துவீச்சில் தவண் இடது கை பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும், பரிசோதனையில் குறைந்தபட்சம் இந்த மாதம் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அடுத்த 3 போட்டிகளுக்கு தவண் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது

ஷிகர் தவணின் உடல்நிலை குறித்தும், அவர் குணமடைந்தாலும் பீல்டிங் செய்ய முடியுமா என்பது குறித்து அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

வழக்கமாக ஷிகர் தவண் ஸ்லிப் திசையில் நின்றுதான் பீல்டிங் செய்வார், தற்போது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்தாலும் ஸ்லிப்பில் உடனடியாக பீல்டிங் செய்ய முடியாது.

ஷிகர் தவண் இடதுகை பேட்ஸ்மேன் என்கிறபோதிலும், பந்துகளை தூக்கி எறிவதில், பீல்டிங் செய்வதில் அவர் வலதுகை வீரர்தான். தற்போது இடதுகை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்தாலும், உடனடியாக அவர் பீல்டிங் செய்ய முடியாது.

பந்தை எறிவதில் எந்தபிரச்சினையும் இருக்காது, ஆனால், பீல்டிங் செய்வதிலும், கேட்ச் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் தவணுக்கு இருக்கும். குறிப்பாக ஸ்லிப் திசையில் இருந்து தவண் பீல்டிங் செய்ய சில காலம் ஆகும். அதிலும் தொடக்க இன்னிங்ஸில் தவண் ஸ்லிப் திசையில் இருந்து பீல்டிங் செய்து, கேட்சுகளை தவறவிட்டால் அது சர்ச்சையாகிவிடும். முதலில் லேசான பந்துகளை பிடிக்க பயிற்சி அளிப்போம், அதன்பின் படிப்படியாக கிரிக்கெட் பந்துகளையும், அதன்பின் கூக்கபுரா பந்துகளையும் பிடிக்கக் கூறி பயிற்சி அளிப்போம். அதுவரை சவாலானதுதான்.

12 நாட்களுக்குப்பின் அவர் பேட்டிங் செய்தாலும் பேட்டிங்கில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்கப் போவதில்லை, ஏனென்றால், அவருக்கு முழு சக்தியை அளிப்பது இடதுகைதான். வலது கை இல்லை. ஆதலால், காயத்தில் இருந்து குணமடைந்து தவண் வந்தபின் பந்தை எறிதலில் பயிற்சி, ஸ்டெம்பை குறிவைத்து எறியும் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும். ஆனால், ஸ்லிப் திசையில் அவரால் சிறிது காலத்துக்கு பீல்டிங் செய்ய முடியாது. இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x