Published : 11 Jun 2019 03:27 PM
Last Updated : 11 Jun 2019 03:27 PM

டிவில்லியர்சிடம் கூறியது என்ன? - மவுனம் கலைத்தார் டுபிளெசிஸ்

தென் ஆப்பிரிக்காவின் ஓய்வு பெற்ற 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்விலிருந்து வெளியே வந்து உலகக்கோப்பையில் ஆடக் கேட்டதாகவும் அதற்கு தென் ஆப்பிரிக்க நிர்வாகம் நிர்தாட்சண்யமாக மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து அமைதி காத்த கேப்டன் டுப்ளெசிஸ் தற்போது மவுனம் கலைத்தார்.

 

நேற்று தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஆடாமலேயே ஒரு புள்ளி கிடைத்தது.

 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் டுப்ளெசிஸ் கூறியதாவது:

 

டிவில்லியர்யஸ் என்னிடம் வந்தார். அது ஒரு வெறும் உரையாடல்தான், அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக  இரவில் தொலைபேசியில் என்னுடன் பேசினார். அதாவது உலகக்கோப்பையில் ஆடலாம் என்று உணர்கிறேன் என்பது போன்று கூறினார். நான் சொன்னேன்,  ‘காலம் கடந்து விட்டது, ஆனால் நான் பயிற்சியாளர், தேர்வுக்குழுவுடன் எதற்கும் ஒருமுறை சரிபார்க்கிறேன். ஏனெனில் அணி அறிவிக்கவில்லையே தவிர ஏற்கெனவே தேர்வு செய்து விட்டனர்.

 

மறுநாள் அணி நிர்வாகத்திடம் இது குறித்து கூறிய போது இப்போது அணியை மாற்ற முடியாது 99.99 % சான்ஸ் இல்லை என்று என்னிடம் கூறினர்.

 

எது எப்படியிருந்தாலும் டிவில்லியர்ஸ் விவகாரம் எங்களை அணியாக ஒருங்கிணைத்தது. அது பெரிய தாக்கமெல்லாம் ஏற்படுத்தவில்லை, தெளிவு குறித்து கொஞ்சம் விவாதிக்கப்பட்டது. மற்றபடி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் ஒரு விஷயம்தான்.

 

இப்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும், இது போன்ற கவன மாறுபாடுகள் சில வேளைகளில் அணியை சரியான பாதைக்கு இட்டுச் ச்செல்லும் அணிக்கு கவனம் செலுத்த ஒரு குறிக்கோளை அளிக்கும்.

 

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x