Published : 14 Jun 2019 05:11 PM
Last Updated : 14 Jun 2019 05:11 PM

ஷெல்டன் காட்ரெல் ‘சல்யூட்’ அடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்: எரிச்சலுற்ற இங்கி. பயிற்சியாளருக்கு ஹோல்டர் பதில்

இந்த உலகக்கோப்பையில் புகழ்பெற்று வருவது மே.இ.தீவுகளின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் விக்கெட் எடுத்த பிறகு பேட்ஸ்மேன் போகும் பெவிலியன் திசையை நோக்கி ‘அட்டென்ஷன்’ நிலையில் சல்யூட் போடுவதாகும்.

 

ஆனால் இது இங்கிலாந்து பயிற்சியாளர் ட்ரவர் பெய்லிஸுக்கு பிடிக்கவில்லை, அவர் கூறும்போது, “ஷெல்டன் சல்யூட் 40 வயதுக்கு மேலுள்ளவர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கும் என்பது உண்மையே. எனக்கும் கூட சல்யூட் எரிச்சலைத்தான் தருகிறது.

 

ஆனால் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதமாக கொண்டாட்ட முறை வைத்திருப்பார்கள், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டம் மற்ற சில அணிகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இது இளைஞர்களின் விளையாட்டு எல்லாமே ஒரு கேளிக்கைதான். சில பேரிடத்தில் இது புன்னகையையோ சிரிப்பையோ வரவழைத்தால் வரவழைக்கட்டுமே” என்று கூறியுள்ளார்.

 

இதையே மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரிடம் கேட்ட போது,  “ஷெல்டன் காட்ரெல் சல்யூட் மாறாது என்றுதான் நினைக்கிறேன், அதுதான் ஷெல்டன். ட்ரவர் பெய்லிஸ் அதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டியதுதான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x