Published : 16 Jun 2019 02:47 PM
Last Updated : 16 Jun 2019 02:47 PM

மே.இ.தீவுகளின் பவுன்சர்களுக்கு ‘ரெடி’; நாங்கள் வெற்றி பெறவே வாய்ப்பு: வங்கதேச வீரர் தமிம் இக்பால் உறுதி

டாண்ட்டனில் மே.இ.தீவுகள் அணியை அடுத்ததாக வங்கதேச அணி சந்திக்கிறது.  மே.இ.தீவுகள் அனைத்து அணிகளுக்கும் பவுன்சர்களை வீசி பிரச்சினைக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் அச்சமில்லை அச்சமில்லை என்று கூறியுள்ளார்.

 

பாகிஸ்தானுக்கு எதிராக மே.இ.தீவுகள் 7 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளையும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் மே.இ.தீவுகள் வீழ்த்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கைவிடப்பட்ட போட்டியிலும் விழுந்த விக்கெட்டுகள் ஷார்ட் பிட்ச் பந்துகளில்தான்.

 

கடந்த ஆண்டு ஜூலையில்தான் மே.இ.தீவுகளில் வங்கதேசம் பயணம் மேற்கொண்ட போது கேப்ரியல், ஹோல்டர், ரோச் ஆகியோர் வங்கதேசத்தை தன் ஷார்ட் பிட்ச் பந்துகளில் போட்டு ஆட்டிப்படைத்தது.

 

ஆனால் மே.இ.தீவுகளின் பவுன்சருக்கு ரெடி என்கிறார் தமிம், நடந்ததென்னவோ பயிற்சியில் முஸ்தபிசுர் ரஹீம் ஷார்ட் பிட்ச் பந்திலேயே கையில் அடிவாங்கினார் முஷ்பிகுர் ரஹிம்.

 

இந்நிலையில் தமிம் இக்பால் கூறியதாவது:

 

எதிரணியினர் என்ன வீசுவார்கள் என்பதை அப்படியே நாங்கள் ஒரு மாடலாக்கி வலைப்பயிற்சியில் பயிற்சி செய்வோம்.  மே.இ.தீவுகள் பெரும்பாலும் ஷார்ட் பிட்ச் உத்தியைக் கடைபிடிப்பார்கள், அவர்கள் எல்லா அணிகளுக்கு எதிராகவும் இதைச் செய்கின்றனர். ரன் ஸ்கோர் வாய்ப்பையும் அவர்கள் வழங்குவார்கள். இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

 

அந்த அணியின் பேட்டிங், பந்து வீச்சு இரண்டையும் பார்த்துள்ளோம். உலகக்கோப்பைக்கு அவர்களது திட்டம் வேறு மாதிரியாக உள்ளது.  நாங்கள் கடைசியாக மே.இ.தீவுகளுக்கு எதிராக அங்கு சென்று ஆடியுள்ளோம்.

 

எனவே எங்களுக்கு அவர்களது உத்தி புதிது கிடையாது. ஆனால் இங்கு சூழ்நிலை வேறு, பிட்ச் வேறு ஆனால் நாங்கள் எங்களது ஏ-கேமை ஆடினோம் என்றால் நிச்சயம் எங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

 

மேலும் சமீபத்திய கடந்த காலத்தில் நாங்கள் மே.இ.தீவுகளை அதிகம் வீழ்த்தியுள்ளோம். ஆகவே நாங்கள்தான் வெற்றி பெறும் அணியாக இருக்கிறோம்.

 

இவ்வாறு கூறினார் தமிம் இக்பால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x