Published : 28 Mar 2018 03:09 PM
Last Updated : 28 Mar 2018 03:09 PM

காயமடைந்த மெஸ்ஸி வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜெண்டினாவை 6-1 என ஊதியது ஸ்பெயின்

மேட்ரிட்டில் நடைபெற்ற ஃப்ரெண்ட்லி கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜெண்டினா 6-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது, காயமடைந்த மெஸ்ஸி ஸ்டேடியத்திலிருந்து இந்தத் தோல்வியை பார்க்க நேரிட்டது.

ஸ்பெயின் வீரர் ஃபிரான்சிஸ்கோ இஸ்கோ அலர்கன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ரஷ்ய உலகக்கோப்பைக் கால்பந்து சாம்பியன் ஆகும் அணி ஸ்பெயின் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஸ்பெயின் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியடையாமல் ஆடி வருகிறது.

ஸ்பெயின் அணியை கிண்டலாக ‘ஃப்ரெண்டிலிக்களின் உலக சாம்பியன்கள்’ என்று அழைக்கப்படுவதுண்டு. 2014 உலகக்கோப்பையில் தோல்வி, யூரோ 2016-ல் நாக் அவுட் தோல்வி ஆகியவற்றின் பின்னணியில் இறங்கிய ஸ்பெயின் உண்மையில் ஸ்பெயினாக ஆடியது.

அர்ஜெண்டினா அணியில் மெஸ்ஸி இல்லையெனில் 75% அணி இல்லை என்றாகிறது, இதில் டிமரியா இல்லை, அகுயெரோ இல்லை, பாலோ டைபாலாவும் இல்லை.

ஆட்டம் தொடங்கி 28 நிமிடங்களிலேயே ஸ்பெயின் 2-0 என்று முன்னிலை பெற்றது. மெஸ்ஸி இல்லாததை ஸ்பெயினின் இனியெஸ்டா, ஹாட்ரிக் இஸ்கோ, அசென்சியோ ஆகியோர் ரசிகர்களுக்கு இட்டு நிரப்பினர். மூவரும் வேகமாக ஆடினர், ஜோர்டி ஆல்பா இடது புறம் மின்னல் வேகம் காட்டினார்.

அர்ஜெண்டினா அணியில் ஹிகுவெய்ன் முதல் கோல் வாய்ப்பை, எளிதான வாய்ப்பை கோலாக மாற்றவில்லை.

மாறாக டீகோ கோஸ்டா 13-வது நிமிடத்திலும், அலர்கான் இஸ்கோ 27வது நிமிடத்திலும் கோல் அடிக்க அர்ஜெண்டினா அணிக்கு நிகோலஸ் ஆட்டாமெண்டி 39வது நிமிடத்தில் தலையால் கோல் அடித்தார், ஆனால் அதுவே கடைசி கோலாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

இடைவேளைக்குப் பிறகு அலார்கான் இஸ்கோ 52வது நிமிடத்திலும் 74வது நிமிடத்திலும் கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார், அர்ஜெண்டினா அணியில் இடையில் காயமடைந்த ரொமீரோவும் இல்லை. கபலெரோதான் கீப்பரகா செயல்பட்டார். இடையில் தியாகோ 55வது நிமிடத்திலும் இயாகோ ஆஸ்பாஸ் 73வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க 6-1 என்று ஸ்பெயின் அபார வெற்றி பெற்றது.

மொத்தத்தில் வழக்காமான ஸ்பெயினின் பாஸ்கள், அதிரடி மூவ்கள், வேகம் ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது. இந்த முறை உலகக்கோப்பையை வெல்வதுதான் ஒரே வழி என்று அன்று மெஸ்ஸி கூறினார், ஆனால் அர்ஜெண்டினா அணி அவர் இல்லாமல் ஆடுவதைப் பார்க்கும் போது மெஸ்ஸியின் கனவு நினைவாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x