Published : 25 Mar 2018 11:10 AM
Last Updated : 25 Mar 2018 11:10 AM

நியூஸிலாந்து டெஸ்ட் மழையால் பாதிப்பு

இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் டிரென்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோரது பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியால் 20.4 ஓவர்களில் 54 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிரெய்க் ஓவர்டன் 33, மார்க் ஸ்டோன்மேன் 11 ரன்கள் சேர்த்தனர். டிரென்ட் போல்ட் 6, டிம் சவுதி 4 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 92.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 102 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முன்னதாக ஜீத் ராவல் 3, டாம் லதாம் 26, ராஸ் டெய்லர் 20 ரன்களில் வெளியேறியிருந்தனர்.

ஹென்றி நிக்கோல்ஸ் 49, வாட்லிங் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை காரணமாக 2-வது நாள் ஆட்டத்தில் 23.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 171 ரன்கள் முன்னிலையுடன் நியூஸிலாந்து அணி நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. ஹென்றி நிக்கோல்ஸ் 149 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவரது 6-வது அரை சதமாக அமைந்தது.

வெறும் 3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது நியூஸிலாந்து அணி 95 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்றி நிக்கோல்ஸ் 52, வாட்லிங் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் 3-வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நியூஸிலாந்து அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது. இதற்கிடையே இன்றைய ஆட்டமும் மழை காரணமாக பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளி யாகி உள்ளது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x