Published : 27 Mar 2018 10:25 AM
Last Updated : 27 Mar 2018 10:25 AM

டேரன் லீ மேன் விலகுகிறார்; ஸ்மித், வார்னர் எதிர்கொள்ளும் ஓராண்டுத் தடை

பந்தைச் சேதப்படுத்தி கையும் களவுமாக ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் பிடிபட பின்னணியில் இருந்த ஸ்மித், வார்னர் சிக்க தற்போது பயிற்சியாளர் டேரன் லீ மேன் தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக டெலிகிராப் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதனை ஊர்ஜிதம் செய்யவில்லை என்றாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் சதர்லேண்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு விரைந்துள்ளதன் பின்னணியில் டேரன் லீ மேன் ராஜினாமா முடிவு இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சதர்லேண்ட் வீரர்களையும் பயிற்சியாளரையும் இன்று சந்திக்கிறார், இன்று மாலைவாக்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் முழு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மித், ஐடியா கொடுத்த வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி நிகழ்ந்தால் இருவருக்கும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும், காரணம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட முடியாது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னர், இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மட்டும் தடை செய்துவிட்டு இருவரையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சம்பாதிக்க விட்டால் அது மிகப்பெரிய மோசமான முடிவுக்கு முன்னுதாரணம் ஆவதோடு ஆஸ்திரேலிய மக்களின் கடும் கோபத்துக்கும் ஆளாக வேண்டும், எனவே கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடும் நெருக்கடியில் உள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஸ்பான்சர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடனான வணிக உறவுகளை முறித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x