Published : 24 Mar 2018 09:08 AM
Last Updated : 24 Mar 2018 09:08 AM

மியாமி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் யுகி பாம்ப்ரி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, போஸ்னியாவின் மிர்சா பேஸிக்கை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜேக் சாக்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார் யுகி பாம்ப்ரி.

கடந்த வாரம் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் தொடரில் முன்னணி வீரரான பிரான்சின் லுகாஸ் பவுலியை பாம்ப்ரி வீழ்த்தியிருந்தார். இதனால் ஜேக் சாக்குக்கு எதிரான ஆட்டத்திலும் பாம்ப்ரி சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x