Published : 09 May 2019 08:07 AM
Last Updated : 09 May 2019 08:07 AM

உலகக் கோப்பையில் ஹை ரிச்சர்ட்சன் விலகல்

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்து வீச்சாளர்ஹை ரிச்சர்ட்சன் இடம் பெற்றிருந்தார். கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போது ஹை ரிச்சர்ட்சனின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

எனினும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அவர்,காயத்தில் இருந்து மீண்டுவந்துவிடுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை கொண்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் குறிப்பிட்ட காலத்துக்குள் ஹை ரிச்சர்ட்சன் முழு உடல் தகுதியை பெற முடியாது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் காயத்தில் இருந்துமீள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஹை ரிச்சர்ட்சனால் தேவையான அளவிலான வேகத்துடன் பந்து வீச முடியவில்லை என அணியின் உடற் பயிற்சி நிபுணர் டேவிட் பீக்லே, கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்துஹை ரிச்சர்ட்சன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக கேன்ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்முறையும் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜோஸ் ஹசல்வுட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x