Last Updated : 06 May, 2019 12:01 PM

 

Published : 06 May 2019 12:01 PM
Last Updated : 06 May 2019 12:01 PM

அணிக்குள் ஒற்றுமையில்லை: ஒப்புக்கொண்ட கேகேஆர் பயிற்சியாளர் சைமன் கேடிச்

கேகேஆர் அணிக்குள்ளும், களத்திலும் வீரர்கள் மத்தியில் ஒற்றுமைக் குறைவு இருந்தது உண்மைதான். தொடர்தோல்விகள் வீரர்களின் உற்சாகத்தை குறைத்துவிட்டது என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குள் வீரர்களுக்கு இடையே மனக்கசப்பு, கருத்து மோதல்கள் இருந்ததும், ஈகோ பிரச்சினையால்தான் ஒத்துழைக்காமல் களத்தில் செயல்பட்டார்கள் என்பதையும் பயிற்சியாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த வாழ்வா சாவா லீக் ஆட்டத்தில் மும்பை அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. கேகேஆர் அணி வீரர்களின் பந்துவீச்சு, பேட்டிங் அனைத்தும் நேற்று மோசமாக இருந்தது, வெற்றியை வாரி, மும்பை அணியிடம் கொடுத்தது போன்று இருந்தது.

இந்த தோல்வி குறித்து அணியின் துணைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அணிக்குள் வீரர்களுக்கு இடையே ஒற்றுமைக் குறைவு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்.

எந்தவிதமான சந்தேகமும் இல்லை, வீரர்களுக்கு இடைடேயும், களத்திலும் ஒருவிதமான பதற்றான சூழல் இருந்தது. ஒற்றுமைக் குறைவும் இருந்தது. இதை மறைக்க முடியாது. இது கடந்தபோட்டியில் இருந்தை அனைவருக்கும் நன்றாகத் தெரிந்ததுதானே. தொடக்கத்தில் சில போட்டிகளில் நாங்கள் வெற்றிக்குப்பின், தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தோம். அந்த தோல்விக்கான காரணத்தை அனைவரும் சேர்ந்து கண்டிறிந்து பேசி இருக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டித் தொடரில் அணி வீரர்களுக்கு இடையே மிகவும் முக்கியமானது உற்சாகம், உத்வேகம், ஒற்றுமை. இவை அனைத்தும் கேகேஆர் அணியில் இருக்கிறது என்பதில் பெருமைப்படுகிறேன்.

ஆனால், தொடர்ந்து நாங்கள் சந்தித்த 6 தோல்விகளுக்குப்பின், அணி வீரர்கள் மத்தியில் உற்சாகம், உத்வேகத்தில் மாற்றம் ஏற்பட்டது. அதிலும் ஆன்ட்ரூ ரஸல் வெளிப்படையாக அணி நிர்வாகத்தையும், கேப்டன் தினேஷ் கார்த்திக்கையும் விமர்சித்தார். தன்னை 3-வது வீரராக களமிறக்க மறுக்கிறார்கள் என்று கூறியது அணியின் ஆரோக்கியமான நட்புறவை, சூழலை பாதித்தது என்பது உண்மைதான்.

இதனால் சில போட்டிகளுக்கு களத்தில் அணியில் உள்ள இரு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையின்மை இருந்ததை ஒப்புக்கொள்கிறேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு அணிகளிடம் எங்கள் சொந்த மண்ணில் நாங்கள் தோற்றிருக்கக்கூடாது. அந்த தோல்வி எங்களை ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்வதில் இருந்து தடுத்துவிட்டது, அந்த இரு வாய்ப்புகளையும் தவறவிட்டோம்.  சிறப்பாக ஐபிஎல் போட்டியைத் தொடங்கி, நடுப்பகுதியில் நாங்கள் கோட்டைவிட்டுவிட்டோம்.

மும்பையில் எங்களின் ரிக்கார்ட் எப்போதும் சாதகமானதாக இருந்தது இல்லை. அதிலும் மூன்றுமுறை சாம்பியனான மும்பை அணியை வீழ்த்துவது சாதாரண விஷயம் அல்ல. தொடக்கத்தில் கில், லின் விக்கெட்டை இழந்ததும், ரஸல் டக்அவுட்டில் ஆட்டமிழந்ததும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு கேடிச் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x