Published : 15 May 2019 05:53 PM
Last Updated : 15 May 2019 05:53 PM

ஐபிஎல்-ஐ வைத்து கோலியின் கேப்டன்சியை எடைபோடாதீர்கள்: கங்குலி

கோலியின் ஐபிஎல் கேப்டன்சி ரெக்கார்டை இந்திய அணியுடன் ஒப்பிடாதீர்கள் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சில மோசமான ஆட்டத்தால் கடைசி இடத்தையே பிடித்தது. இதில் அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்சி குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் உலககோப்பைக்கு தலைமை தாங்க் கோலிக்கு போதிய திறமை இல்லை என்று விமர்சித்தனர்.

இந்த  நிலையில் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கங்குலி கூறியதாவது,”

கோலியின் ஐபிஎல் கேப்டன்சி ரெக்கார்டை இந்திய அணியுடன் ஒப்பிடாதீர்கள். இந்திய அணிக்கு அவர் சிறப்பாக கேப்டன்சி செய்திருக்கிறார். உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்கு வகிக்க போகிறார். அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x