Last Updated : 03 May, 2019 01:42 PM

 

Published : 03 May 2019 01:42 PM
Last Updated : 03 May 2019 01:42 PM

புதிய டி20 தரவரிசைப்பட்டியல்: இந்திய அணிக்கு பின்னடைவு

புதுப்பிக்கப்பட்ட ஐசிசி டி20 தரவரிசைப்பட்டியலில் இந்திய அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், தொடர்ந்து முதலிடத்தை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

2016-17, 2017-18-ம் ஆண்டில் அணிகள் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட ஐசிசி டி20 தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு மாற்றங்களுடன் அணிகளின் தரவரிசை தரப்பட்டுள்ளன.

கடந்த 2009-ம் ஆண்டு ஐசிசி டி20 சாம்பியனான பாகிஸ்தான் 286 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேசமயம், தென் ஆப்பிரிக்கா(262), இங்கிலாந்து (261), ஆஸ்திரேலியா(261), இந்தியா(260) ஆகிய அணிகள் அதிகபட்சமாக 2  புள்ளிகள் இடைவெளியுடன் 2-வது முதல் 5-வது  இடத்தில் உள்ளன.

இதில் 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, 5-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மற்றொரு குறிப்பிடத்தகுந்த மாற்றமாக, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ள. இலங்கை அணி 7-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 8-வது இடத்திலும் உள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணி 9-வது இடத்தில் இருக்கிறது.

மிகவும் வியப்பாக 14-வது இடத்தில் இருந்த நேபாளம் அணி, 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, நமிபியா 20-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x