Published : 18 Apr 2019 12:02 PM
Last Updated : 18 Apr 2019 12:02 PM

உலகக்கோப்பை: இலங்கை அணியின் கேப்டனாக கருணரத்னே நியமனம்- தலைவராக மலிங்கா நீக்கம்

இங்கிலாந்தில் அடுத்த மாத இறுதியில் தொடங்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த மலிங்கா விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

கருணரத்னெ 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு கருணரத்னே ஒருநாள் போட்டியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மலிங்கா தன் கேப்டன்சியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5-0 என்று ஒருநாள் தொடரை இழந்ததால் கேப்டன்சி பொறுப்பிலிருந்து கழற்றி விடப்பட்டதாகத் தெரிகிறது.

 

2014-ல் உலக டி20 கோப்பையை மலிங்கா தலைமையில் இலங்கை வென்றது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் மலிங்கா தலைமையில் இலங்கை அணி 9 போட்டிகளில் தோல்வியடைந்தது.

 

மேலும் அணியில் உள்ள சில முக்கிய வீரர்களுடன் மலிங்காவுக்கு சரியான உறவு இல்லை என்றும் தெரிகிறது, திசர பெரேராவுக்கும் இவருக்கும் ஆகாது என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

 

இலங்கை உலகக்கோப்பை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அணியில் மலிங்கா, அஞ்சேலோ மேத்யூஸ் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x