Published : 27 Apr 2019 08:25 AM
Last Updated : 27 Apr 2019 08:25 AM

ஹைதராபாத்துடன் இன்று மோதல்; வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான் அணி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி களுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டி யலில் 7-வது இடத்தில் உள் ளது. கடைசியாக நேற்றுமுன் தினம் கொல்கத்தா அணிக்கு எதி ரான ஆட்டத்தில் 3 விக்கெட் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது ராஜஸ்தான் அணி.

எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக் கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது ராஜஸ்தான். இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியடைந்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கக்கூடும். இதனால் ராஜஸ்தான் அணி வீரர் கள் கூடுதல் கவ னத்துடன் செயல்படக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கெனவே ஜாஸ் பட்லர் தனது மனைவியின் பிரசவத்தை யொட்டி தொடரில் இருந்து விலகிவிட் டார். இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற் காக ஆல்ரவுண்டர் களான ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் அவர்களின் சேவையை ராஜஸ்தான் அணி இழந்துள்ளது. ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு பெரிய இழப்புதான்.

எனினும் அஜிங்க்ய ரஹானேவின் அதிரடி பார்ம், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் நேர்மறையான ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். இவர்களுடன் 17 வயதான ரியான் பராக் பேட்டிங், பந்து வீச்சில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீர ராக உருவெடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெருக் கடியான சூழ்நிலையில் களமிறங்கிய ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந் தார்.

அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி ஆகியோரும் மட்டையை சுழற்றும் பட்சத்தில் அணியின் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆர்ச்சர் இல்லாத குறையை வருண் ஆரோன் பார்த்துக்கொள்ளக்கூடும்.

கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப் பாக பந்து வீசிய வருண் ஆரோன் 20 ரன் களை மட்டுமே வழங்கி இரு முக்கிய விக்கெட்களை தொடக்கத்திலேயே வீழ்த்தியிருந்தார். இதேபோல் ஓஷன் தாமஸும் தனது அறிமுக ஆட்டத்தி லேயே சற்று தாக்கத்தை ஏற்படுத்தி னார். இந்த கூட்டணி ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரக் கூடும். இதேபோல் சுழற்பந்து வீச்சில் ஸ்ரேயஸ் கோபால் வலுசேர்ப்பவராக உள்ளார்.

ஹைதராபாத் அணி 10 ஆட்டத்தில் பங்கேற்று 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசியாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இன் றைய ஆட்டத்தை எதிர்கொள் கிறது ஹைதராபாத் அணி.

தொடக்க பேட்டிங்கில் அதி ரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோ, உலகக் கோப்பைக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் டேவிட் வார் னருடன் கேப்டன் கேன் வில்லியம்சன் அல்லது மார்ட்டின் கப்தில் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும்.

கடந்த ஆட்டத்தில் 49 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய மணீஷ் பாண்டேவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோல் இந்த சீசனில் ஒரு சதம், 7 அரைசதங்கள் என 574 ரன்கள் வேட்டையாடி உள்ள டேவிட் வார்னர் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் வரும் 29-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் டேவிட் வார்னர் இந்த சீசனில் இருந்து விடை பெறுகிறார்.

இதனால் அதற்குள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று ஹைதராபாத் அணியை பிளே ஆஃப் சுற் றுக்கு முன்னேறச் செய்வ தில் வார்னர் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x