Published : 19 Apr 2019 06:50 PM
Last Updated : 19 Apr 2019 06:50 PM

தன்பாலின திருமணம் செய்து கொண்ட இரண்டு சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகள்

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த 2 பெண் கிரிக்கெட்  வீராங்கனைகள் கடந்த வார இறுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

 

நியூஸிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் ஹேய்லி ஜென்சென், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸி. அணிக்கு இன்னமும் ஆடாத ஆனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஆடிய நிகோலா ஹேன்காக் ஆகியோர் தன்பாலின திருமணம் செய்து கொண்டனர்.

 

இதில் ஹெய்லி ஜென்சன் மெல்போர்ன் ஸ்டார்சுக்கு ஆடியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணத்தை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தன் ட்விட்டரில் வெளியிட்டது. அதோடு வாழ்த்துக்களை தெரிவித்து அனைவரது ஆதரவையும் கோரியுள்ளது.

 

தன்பாலினத் திருமணம் நியூசிலாந்தில் 2013-ல் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் அதன் பிறகு 2017-ல் தான் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x