Published : 26 Apr 2019 05:04 PM
Last Updated : 26 Apr 2019 05:04 PM

ஆன்ட்ரூ ரஸல் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றிலேயே சிக்ஸர்கள் மூலம் அதிக ரன்கள்

ஐபிஎல் போட்டியின் கடந்த 12 ஆண்டுகள் வரலாற்றில் அதிகமான ரன்களை சிக்ஸர்கள் அடித்தே சேர்த்த வீரர்களில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஆன்ட்ரூ ரஸல் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

12-வது ஐபிஎல் போட்டித் தொடர் போட்டி நடந்து வருகிறது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆன்ட்ரூ ரஸல் அந்த அணியின் துருப்புச் சீட்டாகவும், எக்ஸ்ஃபேக்டராகவும் இருந்து வருகிறார். எந்த நேரத்தில் ரஸல்  அதிரடியாக ஆடுவார் என்பது தெரியாது. இக்கட்டான நேரத்தில் களமிறங்கி அணியை வெற்றிபெற வைக்கவும், ஸ்கோரை உயர்த்திக்கொடுக்கவும் ரஸல் முக்கியக் காரணமாக இருந்து வருகிறார்.

பேட்ஸ்மன்ஆண்டுஇன்னிங்ஸ்ரன்சிக்ஸ்சதவீதம்
ரஸல்

2019

10

392

41

62.76%

ரஸல்

2018

16

316

31

58.86%

கெயில்

2016

10

227

21

55.51%

பொலார்ட்

2019

10

195

18

55.38%

ஜேம்ஸ் ஃபாக்னர்

2014

13

181

16

53.04%

மேக்ஸ்வெல்

2017

14

310

26

50.32%

கெயில்

2012

15

733

59

48.29%

ஹர்திக் பாண்டியா

2017

17

250

20

48.00%

மெக்கலம்

2008

4

188

15

47.87%

ரஸல்

2016

12

188

15

47.87%

 

கடந்த 12 ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் அதிகமான ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் ரஸல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை எந்த ஒரு வீரரும் சிக்ஸர்கள் மூலம் அதிகமான ரன்களைக் குவித்தது இல்லை. இந்த ஐபிஎல் சீசனில் ரஸல் இதுவரை 392 ரன்கள் சேர்த்துள்ள ரஸல் 41 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரஸல் சேர்த்த 392 ரன்களில் சிக்ஸர்கள் மூலமே 62 சதவீத ரன்கள் வந்துள்ளன. இந்த சாதனையை தொடர்ந்து 2-வது ஆண்டாக ரஸல் தக்கவைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய ரஸல் 316 ரன்கள் சேர்த்தார். இதில் 31 சிக்ஸர்கள் அடித்து, 59 சதவீத ரன்களை சிக்ஸர்கள் மூலம் எடுத்துள்ளார்.

ரஸலுக்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத்தீவுகள் அணியன் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு 10 போட்டிகளில் விளையாடிய கெயில் 21 சிக்ஸர்கள் உள்பட 227 ரன்கள் குவித்தார். இதில் 55 சதவீத ரன்கள் சிக்ஸர்கள் மூலம் அடிக்ககப்பட்டதாகும்.

கடந்த 2012-ம் ஆண்டு கெயில் 15 இன்னிங்களில் விளையாடி 733 ரன்கள் சேர்த்துள்ளார். அப்போது 59 சிக்ஸர்களை கெயில் அடித்தபோதிலும் ரன்கள் அதிகம் என்பதால், சதவீதம் அடிப்படையில் 48 சதவீத ரன்கள் மட்டுமே சிக்ஸர்கள் மூலம் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x