Published : 17 Apr 2019 07:24 PM
Last Updated : 17 Apr 2019 07:24 PM

சிஎஸ்கே கொடியுடன் மைதானத்துக்குள் அனுமதி மறுப்பு: கொந்தளித்த தோனி ரசிகர்களால் ஹைதராபாத்தில் பரபரப்பு

இன்று ஐபிஎல் 2019 தொடரின் 33வது போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கே கொடியை மைதானத்துக்குள் எடுத்துச் செல்லக் கூடாது என்ற திடீர் தடை உத்தரவினால் சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

 

இது தொடர்பாக ட்ரெண்டிங் ஆகும் வீடியோ ஒன்றில் சிஎஸ்கேவின் தீவிர விசிறி சரவணன் ஹரி தன் சமூகவலைப்பக்கத்தில் தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது:

 

அன்புள்ள சன்ரைசர்ஸ் நிர்வாகமே, சிஎஸ்கே கொடியுடன் என்னை அனுமதிக்க மறுத்தனர்.  ஆனால் சன் ரைசர்ஸ் கொடிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனக்கு உள்ளே நுழைய அனுமதி மறுத்ததை நான் வீடியோ எடுத்ததையடுத்து அவர்கள் என்னை அனுமதித்தனர். நான் மட்டுமல்ல, நிறைய ரசிகர்களை சிஎஸ்கே கொடியை  விட்டு விட்டு வருமாறும் தோனி  போஸ்டர்களை விட்டு விட்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

மற்ற நுழைவாயில்களில் என்ன நிலவரம் என்று தெரியவில்லை, ஆனால் கேட் 8-ல் நான் நுழையும் முன்பே நிறைய ரசிகர்கள் சிஎஸ்கே கொடியை விட்டுவிட்டு செல்வதைப் பார்த்தேன். கொடிக்குச்சி அல்ல கொடிகளை அனுமதிக்கவில்லை என்பதை கவனியுங்கள்.

 

நான் முகத்தில் பூச்சு பூசியிருந்தேன் அதை வாஷ் செய்து விட்டு வா என்று என்னை பாதுகாப்புக் காவலர்கள் கூறினர். இது முட்டாள்தனமானது, என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 

ஆனால் டியர் சன்ரைசர்ஸ் உங்களிடம் வரும் எந்த ஒரு விசிறியையும் நீங்கள் இப்படி நடத்தக் கூடாது..

 

இதில் முக்கியமான சிறப்பு என்னவெனில் சன் ரைசர்ஸ் ரசிகர்கள் சிலர் எனக்கு ஆதரவாக வர அவர்கள் என்னை கொடியுடன் அனுமதித்தனர். அவர்களுக்கு நன்றி. ரசிகர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம், ஆனால் இந்தத் தடைக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 

என்று சரவணன் ஹரி கொதித்து டிவிட்டில் புலம்பியுள்ளார்.

 

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டரும் வினையாற்றி, “டியர் சன் ரைசர்ஸ்... இது என்னவென்று பாருங்கள்” என்று ட்வீட் செய்துள்ளது குறிபிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x