Last Updated : 01 Apr, 2019 05:09 PM

 

Published : 01 Apr 2019 05:09 PM
Last Updated : 01 Apr 2019 05:09 PM

கோலி படை ஹாட்ரிக் : மூன்றாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்தது இந்திய அணி

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் இருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக வழங்கப்படும் தண்டத்தை தக்கவைத்தது கோலி தலைமையிலான இந்திய அணி.

இதனால்  ஐசிசி சார்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டத்தையும், 10 லட்சம் அமெரிக்க டாலர்களும் 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணி 108 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது.

விராட் கோலிய தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற  வெற்றியால் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தது. இங்கிலாந்தில் தொடரை இழந்தாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றது, ஆஸ்திரேலியாவில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி, மே.இ.தீவுகளுடன் டெஸ்ட் தொடர் வெற்றி என தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி இருந்தது.

அதேசமயம், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூசிலாந்து அணி கடந்த ஆண்டில் இருந்து சிறப்பாக விளையாடி வந்தது. வங்கதேசத்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டித் தொடரையும் கைப்பற்றியது. 108 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து அணிக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது.

கடந்த இரு ஆண்டுகளாக 2-வது இடத்தில் இடம்பிடித்து வந்த தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டு 105 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இலங்கையுடன் டெஸ்ட்தொடரை இழந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடையாவாகும். தென் ஆப்பிரிக்க அணிக்கு  2  லட்சம் டாலர்கள் பரிசுவழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து அணியும் 104 புள்ளிகள் பெற்று இருந்தாலும், தசமபுள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியா 4-வது இடத்தைப் பிடித்து ஒரு லட்சம் டாலர்களை வென்றது.

ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி மனு ஷானே கூறுகையில், " ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டத்தை மூன்றாவது முறையாகப் பெற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அர்ப்பணிப்புடனும், தொடர்ந்து முதலிடத்தை தக்கவைக்கும் வகையில் இந்திய அணி விளையாடிவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு் வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆகஸ்ட்மாதம் நடைபெற உள்ளது.

டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 9 அணிகள் 27 சீரியஸ்களில் விளையாடுவார்கள். 71 போட்டிகள் கொண்டதாக இருக்கம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் 2021-ம் ஆண்டு நடைபெறும் " எனத் தெரிவித்தார்.

இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், " மீண்டும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டத்தை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமையாக இருக்கிறது. அனைத்து துறைகளிலும் எங்கள் அணி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. முதலிடத்தில் வந்துள்ளது கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. அனைவருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் தெரியும், இங்குதான் பேட்ஸ்மேன்கள் உருவாக முடியும். வருகின்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும இந்திய அணி சிறப்பாகச் செயல்படும் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x