Published : 09 Apr 2019 10:15 PM
Last Updated : 09 Apr 2019 10:15 PM

ஹர்பஜன் விட்ட கேட்சினால் ரஸல் 50 நாட் அவுட்:  சாஹர் அபாரம்; தோனி வலையில் வீழ்ந்த கொல்கத்தா

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 23வது போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி  கொல்கத்தாவை முதலில் பேட்  செய்ய அழைத்து துல்லியமான கேப்டன்சி மற்றும் அபார்மான பந்து வீச்சு மாற்றம், களவியூகத்தினால் கொல்கத்தாவை 108/9 என்று குறுக்கினார்.

 

ஆந்த்ரே ரஸல் 10 பந்துகளில் 8 ரன்கள் என்று துல்லியப் பந்து வீச்சில் கட்டிப்போடப்பட்ட நிலையில் 13வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய 2வது பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் ஆனால் செங்குத்தாக சரியான கொடி ஏற்றினார், பந்து இருள் வானில் சென்று திரும்பியது, ஹர்பஜன் சரியாகக் கணிக்கத் தவறிய உயரம் சென்றது.

 

மேலும் இருளிலிருந்து பந்து வரும் போது அதன் போக்கைக் கணிக்க ஹர்பஜனால் முடியவில்லை பந்து அவருக்குப் பின்னால் சென்று விழுந்தது. ரஸல் விக்கெட் நழுவ விடப்பட்டது.

 

அதன் பிறகும் கூட ரஸல் துல்லியப் பந்து வீச்சு, களவியூகத்தினால் கட்டிப்போடப்பட்டார் மேலும் எதிர்முனையில் ஒருவர் கூட நின்றாடவில்லை என்பதால் ரஸல் தலையில் சுமை ஏறியது. ஒருமுரை தாஹிர் பந்தில் எல்.பி.முறையீடு கேட்க களநடுவர் மறுக்க தோனி ரிவ்யூ செய்தார், ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றது தப்பினார் ரஸல்.

 

 

ஆனாலும் 19வது ஓவரில் சிறப்பாக வீசிய சாஹரை அவர் ஒரு சிக்சர் அடித்தார், அந்த ஓவரில் 6 ரன்கள்தான், ரஸல் சிங்கிள்களைத் தவிர்த்து தானே ஸ்ட்ரைக்கை வைத்து கொண்ட நேரம் அது.  மேலும் சாஹர் கடைசி பந்தை மிக அருமையாக ஒரு ஸ்லோ லெக் கட்டர் வீச ரஸல் சுற்ற மாட்டவில்லை.

 

20வது ஓவரில் குர்னிதான் ஸ்ட்ரைக்கில் இருந்தார் தோனி 6 பீல்டர்களை வட்டத்துக்குள் கொண்டு வந்தார், ஆனாலும் குர்னி சிங்கிள் எடுத்தார்.

 

ரஸல் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை 100 ரன்களைத் தாண்டி கொண்டு சென்றதோடு 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று 50 நாட் அவுட் என்று இருந்தார். ஆகவே ஒரு விதத்தில் ரஸல் நிரூபித்து விட்டார், ஆனால் தோனி மந்திரத்தினால் கட்டும்படுத்தப்பட்டார். இவர்தான் அதிகபட்ச ஸ்கோர்.

 

இவருக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் மிகப்பிரமாதமாக 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிரிடம் வீழ்ந்தார். இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் கார்த்திக்குடையது.

 

தொடக்கத்தில் பவர் ப்ளேவுக்கு முன்னதாகவே லின், நரைன், உத்தப்பா ஆகியோர் காலியாக 24/4 என்று ஆனது கேகேஆர்.  லின்,உத்தப்பாவை சாஹர் தோனியின் மிக அருமையான களவியூகத்தில் நல்ல பந்து வீச்சில் காலி செய்தார். லின் எல்.பி. ஆனார், உத்தப்பா புல்ஷாட்டுக்காக நிறுத்தப்பட்ட ஒரே மிட்விக்கெட் பீல்டரிடம் கேட்ச் ஆனார். அதிரடி வீரர் சுனில் நரைனை ஹர்பஜன் வீழ்த்தினார். பார்மில் இருக்கும் ராணாவையும் சாஹர் வீழ்த்தினார், மிட்விக்கெட் கேட்ச், இதுவும் ஒரு அருமையான களவியூகம் ராணாவும் புரியாமல் புல் ஷாட்டில் விழுந்தார், சாஹர் கடைசியில் 4 ஓவர் 20 ரன்கள் 3 விக்கெட்.  ஷுப்மன் கில், 9 ரன்களில் இம்ரான் தாஹிர் பந்தில் தோனியிடம் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். சாவ்லா, குல்தீப், பிரசீத் கிருஷ்ணா ஒற்றை இலக்கத்தில் சொதப்ப ரஸல் 50 நாட் அவுட், ஆனால் கட்டுப்படுத்தப்பட்டார், இவர் மட்டும் 8 ரன்களில் அவுட் ஆகியிருந்தால் கேகேஆர் ஸ்கோரைக் காணச் சகித்திருக்காது.

 

ஹர்பஜன் சிங் 15 ரன்களுக்கு 2 விக்கெட். இம்ரான் தாஹிர் 21 ரன்கள் 2 விக்கெட், குக்கெலீன் மட்டுமே 4 ஓவர்கள் 34 ரன்கள் விக்கெட் இல்லை. கேகேஆர் மொத்தத்தில் கடும் ஏமாற்றமளித்தது அல்லது தோனி வலையில் வீழ்ந்து 108 ரன்களையே எடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x