Published : 31 Mar 2019 07:46 AM
Last Updated : 31 Mar 2019 07:46 AM

அதிரடி ஆட்டத்துக்கு தயாரான டேவிட் வார்னர்: ஹைதராபாத் - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஹைதராபாதிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் போட்டி மாலை 4 மணிக்கு நடை பெறவுள்ளது.

இதுவரை பெங்களூரு அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி கண்டுள் ளது. அந்த அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட் டோர் இருந்தபோதும் இதுவரை அந்த அணியால் வெற்றியைச் சுவைக்க முடியவில்லை.

பார்த்தீவ் பட்டேல், மொயீன் அலி, ஷிம்ரன் ஹெட்மயர், காலின் டி கிராண்ட்ஹோம் உள்ளிட்டோர் இன்றைய ஆட்டத் தில் உயர்மட்டத் திறனை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

பெங்களூரு அணி, தனது 2-வது ஆட்டத் தில் மும்பையுடன் மோதியது. இதில் மும்பை அணி திரில் வெற்றி கண்டது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரை மும்பை வீரர் மலிங்கா வீசினார். கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த பந்தில் பெங்களூரு வீரர்களால் ரன் எடுக்க முடிய வில்லை. இதனால் மும்பை வெற்றி கண்டது. ஆனால் அந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்பட வேண்டியதாகும். ஆனால் களநடுவர் அதை கவனிக்காத தால் மும்பைக்கு வெற்றி யும், பெங்களூருக்கு தோல்வியும் கிடைத்தது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இன்றைய ஆட் டத்தில் முதல் வெற்றியை சுவைக்கும் நோக்கத்தில் பெங்களூரு அணி கள மிறங்கவுள்ளது. அதே நேரத் தில் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என்ற நிலையில் விளையாட உள்ளது.

அந்த அணியின் கேப்டன் வில்லியம்ஸன் அணிக்குத் திரும்பியுள்ளதால் அணி வலு பெற்றுள்ளது. முதல் 2 போட்டிகளிலும் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் இந்த முறையும் தனது அதிரடியை வெளிப்படுத்த தயாராக உள்ளார். மேலும் மணீஷ் பாண்டே, யூசுப் பதான், விஜய் சங்கர், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்டோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர்.

பவுலிங்கில் புவ னேஷ்வர் குமார், ரஷித் கான், ஷாபாஸ் நதீம், சித்தார்த் கவுல் ஆகியோர் தங்க ளது உயர்மட்ட திறனை வெளிப் படுத்தக் காத் திருக்கின் றனர்.

நேரம்: மாலை 4

இடம்: ஹைதராபாத்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x